இந்த டித்வா புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் 8 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக சென்னையில் நாளை மையம் கொள்ளும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விட நாளை சென்னையில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசக்கூடும் எனவும் கடல் சீற்றத்துடன் காணப்படும் உணவு தெரிவித்திருக்கின்றனர்.
எனவே நாளை தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்டும், ஒன்பது மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்த பட்டிருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து முகாம்களுக்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் முகாம்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மக்களுக்கு புயல் குறித்த விழிப்புணர்வு குறுசெய்திகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீவிர கனமழை (ரெட் அலர்ட்)
ராணிப்பேட்டை
திருவள்ளூர்
அதிக கனமழை(ஆரஞ்சு அலர்ட்)
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருவண்ணாமலை
திருப்பத்தூர்
வேலூர்
கிருஷ்ணகிரி
மிக கனமழை
கள்ளக்குறிச்சி
கடலூர்
புதுச்சேரி
சேலம்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.