வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை விடுமுறையை இல்லாமல் வழக்கம் போல் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பதாக பூங்கா நிர்வாக அறிவித்துள்ளது.
சென்னை , வண்டலூரில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வழக்கமாகச் செவ்வாய்க் கிழமை அன்று விடுமுறை நாளாக பூங்கா நிர்வாகம் கடைப்பிடித்து வருகின்றனர்.வண்டலூர் அறி பூங்காவானது ஆசிய அளவில் மிகப்பெரிய பூங்காவாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஓராண்டிற்கு மட்டும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 20 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் பார்வையாளர்களிடம் தலா ஒரு நபருக்கு ரூபாய் 90 கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகின்றனர். சிறுவர் என்றால் மட்டும் தலா ஒருவருக்கு ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நாளை செவ்வாய்கிழமை விடுமுறை இல்லாமல் மகாவீர் ஜெயந்தி என்பதால் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கம் போல் செயல்படுவதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.