இன்று சென்னை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொடுத்தார்கள். ‘அமைதி,வளம் வளர்ச்சி என்ற அம்மாவின் தரகமந்திரத்தையும், இரு பெரும் தலைவர்கள் வகுத்து கொடுத்த மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் பேணி காப்பது நமது கடமை. அன்று ஆட்சியில் இருந்தபோதும், இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் இந்த ஊடகங்கள் நம்மை விமர்சித்து வருகிறது. அதிமுக இருப்பதனால் தான் இந்த ஊடகங்கள் இயங்கி வருகிறது.
புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மாவும் நாட்டு மக்களை தான் வாரிசாக பார்த்தார்கள், எனவே பார்த்து பார்த்து எண்ணற்ற திட்டங்களை வழங்கினார்கள். அதனால் தான் வேறு யாராலும் அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியவில்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மை தீர்மானத்தை நிறைவேற்றும் போது அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் எப்படி நடந்து கொண்டார் என நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். சட்டப்பேரவை தலைவரை கீழே தள்ளி அவரது இருக்கையில் அமர்ந்தார்கள், எங்களது மேசையின் மீது ஏறி நடனமாடினார்கள் இதையெல்லாம் தாண்டி நாம் வெற்றி பெற்றோம்.
வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். அடுத்த ஆண்டு அதிமுக வெற்றி பெற்றும் பொது நீங்கள் எந்த நிலையில் இருப்பீர்கள் என தெரியவில்லை. நமது ஆட்சியை கலைப்பதற்காக பல்வேறு சதி திட்டங்களை தீட்டிங்களை வழக்குகளை தொடுத்தார்கள், அவற்றை எல்லாம் தாண்டி நாம் நல்ல ஆட்சியை கொடுத்தோம். அதனால் தான் இன்று வரை திமுகவால் கூட நமது ஆட்சியை குறை கூற முடியவில்லை. ஆட்சியில் ஏதாவது குறை இருந்தால் கேள்வி கேளுங்கள் பதில் சொல்ல நாங்கள் தயார். ஒரு பொற்கால ஆட்சியை நாம் கொடுத்திருக்கிறோம்.
முன்னாள் அமைச்சர்களே நீங்கள் உங்கள் அனுபவத்தை பயன்படுத்துங்கள் நாம் ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும் அந்த விவரம் தெரியாமல் ஸ்டாலின் விமர்சித்து கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலே அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும், 2021 தேர்தலின் போது 525 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள் ஆனால் அதில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமானது அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, போன்றவற்றை நிறைவேற்றவில்லை.
குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுத்து விட்டோம் என தெரிவிக்கின்றனர் தொடர்ந்து அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் அதை 28 மாதங்கள் கழித்து நிறைவேற்றினார்கள். நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள் ஆனால் ஓட்டு அதிமுக கூட்டணிக்கு தான் போடுவார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர். கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் வருத்தப்பட்டார்கள். நான் நேரடியாக கொள்முதல் நிளலயத்திற்கு சென்று அங்கு விவசாயிகள் கோரிக்கை கேட்டறித்தேன். திமுகவில் இருந்து யாரும் செல்லவில்லை உதயநிதி டெல்டாவிற்கு செல்கிறார் என கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர் சென்று விவசாயிகளை சந்திக்காமல் சரக்கு ரயிலுக்கு கொடி அசைத்து விட்டு வருகிறார்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றிலும் விலைவாசி உயர்வு, அதுமட்டுமல்லாமல் வரி மீது வாரி போட்டு மக்களின் ரத்தம் உறிஞ்சப்பட்டு வருகிறது. உடலுறுப்புகளை விற்று ஆட்சி நடத்தும் கொடுமை நடந்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கிட்னி திருட்டிற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். மகளிருக்கு இலவச பேருந்து என சொல்கின்றனர் அந்த பேருந்தில் ஏறி இறங்கினால் தான் உயிருக்கு உறுதி அந்த அளவிற்கு ஓட்டை உடைசலாக இருக்கிறது. இதையெல்லாம் நான் கூறுவது நீங்கள் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இருக்கும் வேறுபாடுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.