trisha in vijay  
தமிழ்நாடு

"விஜய்யின் நீலாங்கரை வீட்டில் திரிஷா" - பிறந்தநாள் சந்திப்பா?.. தவெக முன்னிலை வகிக்கும் நிலையில் கவனம் பெற்ற 'exclusive விசிட்'

தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்..

Mahalakshmi Somasundaram

தற்போது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பரபரப்பான சற்றும் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த தேர்தலில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சில நிறுவனங்கள் எக்ஸிட் போலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்ற பெரும் என் கணிப்பு வெளியிட்டிருந்த இலையில் அதனை அரசியல் விமர்சகர்கள் ஏற்கமறுப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை பல இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

குறிப்பாக தவெக சதமடித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி 52 இடங்களில் திமுக, 73 இடங்களில் அதிமுக, 109 இடங்களில் தவெகவும் முன்னிலை வகிக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வரும் நிலையில் அங்கங்கே தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய்யின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் விஜயின் வெற்றியை கொண்டாடி விசில் அடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து விஜயின் நீலாங்கரை வீட்டிற்கு முன்பு ரசிகர் கூடி முன்னிலையை கொண்டாடி வரும் நிலையில் விஜயின் வீட்டிற்கு நடிகை திரிஷா சென்றுள்ளார்.  தமிழக வெற்றிகழகம் முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க திரிஷா அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், மேலும் பிறந்தநாள் வாழ்த்து பெற சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவு நாளின் போது திரிஷா தான் வாக்களித்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் கில்லி பட பாடலுடன் பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் தற்போது விஜய்யின் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்