தமிழ்நாடு

“முதல்வர் விஜய்க்கு த்ரிஷாவின் சல்யூட்” - பதிலுக்கு புன்னகைத்த CM.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Mahalakshmi Somasundaram

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் காவல்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றதுடன், வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அணிவகுப்பு ஊர்தியில் முதலமைச்சர் விஜய் கம்பீரமாக வலம் வந்தார். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்களை நோக்கி கையை உயர்த்தி சல்யூட் செய்தார். கேலரியின் முதல் வரிசையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். முதலமைச்சர் விஜய் அவர்களை நோக்கி சல்யூட் செய்தபோது, எஸ்.ஏ.சந்திரசேகரும் ஷோபாவும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். ஆனால் நடிகை த்ரிஷாவோ உடனடியாக எழுந்து நின்று, விஜய்யை நோக்கி கம்பீரமாக சல்யூட் அடித்தார்.

இதனைப் பார்த்த முதல்வர் விஜய், அணிவகுப்பு ஊர்தியில் இருந்தபடியே புன்னகையுடன் த்ரிஷாவின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கேமராக்களில் பதிவான நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, முதலமைச்சரின் குடும்பத்தினருடன் முதல் வரிசையில் நடிகை த்ரிஷா அமர்ந்திருந்ததும், அணிவகுப்பின்போது விஜய்க்கு சல்யூட் அடித்ததும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, விஜய்–சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அந்த விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படும் தகவலும் தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து விழாவில் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது சுதந்திர தின விழாவிலும் அவர்களின் சந்திப்பு மற்றும் த்ரிஷாவின் சல்யூட் காட்சி மீண்டும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்