தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு பேட்டி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அனைத்தும் தெரியும்
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தை கலவரமாக மாற்றியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும் படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை தாக்கல்... தலா 50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை!
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால் தூத்துக்குடி கலவரம் பற்றி நொடிக்கு நொடி காவல் துறை சார்பில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஒரு நபர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலை வெளியிட்ட ரஜினிகாந்த்
எனவே யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன விதமான அரசியல் பின்புலம் இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தவறுகள் அனைத்தும் காவல்துறை மீது தான் என கூறியுள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.