தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று கரூரில் விஜய் பரப்புரை செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காவல்துறையினர் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை வைக்க இருப்பதை தவெக வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அறிவழகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு சென்னை பசுமை சாலையில் இருக்க கூடிய நீதிபதி தண்டபாணி இல்லத்திற்கு கோரிக்கை வைக்க விரைந்துள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டு நிலையில் தவெக சார்பில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதியில் இருந்து பெறப்படும் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ள நிலையில் வெக சார்பில் வைக்கப்பட்ட முறையீடு நாளை பிற்பகல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் தலைமையில் விசாரிக்கப்படும் என் நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் முழுமையான விசாரணை செய்து உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.