தமிழ்நாடு

குடியாத்தம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய தவெக சிந்து.. தனித்தொகுதியில் திராவிட கட்சிகளின் தோல்விக்கு காரணம் என்ன?

இரு கட்சிகளின் வாக்கு வங்கி தமிழக வெற்றி கழகத்தால் கணிசமாக சிதைந்துள்ளது..

Mahalakshmi Somasundaram

குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இந்த முறை வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு, இரண்டு திராவிட கட்சிகளின் கணக்கை மாற்றி அமைத்திருக்கிறது. குடியாத்தம் தொகுதியில் தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிந்து, 82,858 வாக்குகள் பெற்று வெற்றியை தன் வசப்படுத்தி உள்ளார். சிந்து பெற்ற இந்த வாக்கு வெறும் எண்ணிக்கையின் மாற்றமாக மட்டும் இல்லாமல் குடியாத்தம் தொகுதியின் அரசியல் மாற்றத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த குடியாத்தம் தகுதி கடந்த மூன்று தேர்தலில் திராவிட கட்சிகளின் வெற்றியை உறுதி செய்யும் தொகுதியாக இருந்தது. 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அதிமுகவும் வலுவான எதிர்ப்பை அளித்திருந்தது. ஆனால் இம்முறை அந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கி தமிழக வெற்றி கழகத்தால் கணிசமாக சிதைந்துள்ளது என்பது தெளிவாகிறது.சிந்துவின் வெற்றிக்கு பின்னால் பல காரணங்கள் ஒன்றாக செயல்பட்டுள்ளன.

முதன்மையாக, அடிப்படை பிரச்சினைகள் குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்களிடையே நீண்ட நாள் அதிருப்தி நிலவியது. இந்த அதிருப்தியை திமுக ஆட்சியோ, அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போதோ முழுமையாக தீர்க்க முடியாத நிலை உருவாகியது. இதைச் சிந்து தனது பிரசாரத்தில் முக்கியமாக முன்வைத்து, “மாற்றம்” என்ற கோஷத்தை வலுவாக எடுத்துச் சென்றார். இரண்டாவதாக அதிமுக வேட்பாளரான பரிதா புருஷோத்தமன் பெரும்பாலும் மக்களை சாந்தி பிரச்சாரம் செய்யவில்லை. மேலும் திமுக இந்த தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுங்கியதும் குடியாத்தத்தில் திமுக பின்னடைவு சந்தித்ததற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது

மேலும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் மறைமுக தாக்கமும் இந்தத் தொகுதியில் கணிசமாக சிந்துவுக்கு வெற்றியை உறுதி செய்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களித்தவர்கள் மத்தியில் உருவான மாற்றம் வேண்டும் என்ற மனநிலை, திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகளாக மாறியது.திமுகவின் தோல்விக்கான முக்கிய காரணமாக, ஆட்சியில் இருந்தபோது உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட செயல்பாடுகள் குறித்த அதிருப்தி குறிப்பிடப்படுகிறது. அதிமுகவிற்கு வந்த இழப்பு, கட்சியின் உள்ளக குழப்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பிரசாரத்தின் குறைபாடுகளால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இரு காரணங்களும் சேர்ந்து, புதிய மாற்றத்தை ஏற்க தயார் நிலையில் இருந்த வாக்காளர்களை சிந்துவின் பக்கம் திரும்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.