ex tvk member vaishnavai joins in dmk 
தமிழ்நாடு

தவெகவும் பாஜகவும் ஒன்னுதான்..! கட்சி மாறிய இன்ஸ்டா பிரபலம் பரபரப்பு பேட்டி!

வைஷ்ணவி 20-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில்...

Saleth stephi graph

பாஜக வின் மற்றொரு வடிவம் தான் தவெக என திமுகவில் இணைந்த கோவையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் பரபரப்பு பேட்டி! 

நடிகர் விஜய் -ன் தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பல சலசலப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. தவெக -வில் பல இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். அந்தவகையில்  கோயமுத்தூர் கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவி தவெக -இல் இணைந்து சிறப்பாக செயல்பட்டார்.

இன்ஸ்டாவில் ஏற்கனவே பிரபலமடைந்திருந்ததாலும் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பெண் என்ற காரணத்தினால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சியில் உள்ள நிர்வாகிகள் தன்னை வளரவிடாமல் தடுப்பதாகவும் புகார் கூறிய வைஷ்ணவி, கடந்த 3-ம் தேதி தவெகவில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். 

தவெக -லிருந்து விலகிய வைஷ்ணவியை பாஜவில் சேர அக்கட்சி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்தார்.  அதுமட்டுமின்றி இவரை தங்கள் கட்சியில் வந்து சேர்ந்துகொள்ளுமாறு மதிமுக -வும் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், வைஷ்ணவி 20-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் கோவையில் நேற்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைஷ்ணவி, “தவெகவில் ஒரு வருட காலமாக பயணித்தேன். தவெக இளைஞர்களுக்கான அரசியலை முன்னெடுத்து செல்வார்கள் என நம்பிய  பலபேர் அக்கட்சியில் இணைந்தார்கள். ஆனால், கடைசியில் அதிருப்தி தான் மிச்சம். எனவே, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன்.

“தவெகவை பாஜவின் மற்றொரு வடிவம்தான். எனவே, அதில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அதன் மூலமாக என்னுடைய மக்கள் நலப்பணிகள்  தொடர உள்ளேன் எனக்கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்