vijay vs eps 
தமிழ்நாடு

“என்ன ஆனாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை” தவெக உறுதி!! அவங்கள பத்தி ஏன் வீணா பேசிகிட்டு!? - மீண்டும் மீண்டும் தாக்கப்படும் அதிமுக!!

பாஜக அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை....

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது பரிணாமத்தை அடைந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தை துவங்கிய விஜய், இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்களுக்கும் செல்லத் துவங்கியிருக்கிறார். 

கடந்த செப்டம்பர் 27அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே பின் விளைவுகளை ஏற்படுத்தி அவர்மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. ஆனாலும், தவெக -வினர் இந்த பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவு மீண்டிருக்கின்றனர், என்றுதான் சொல்ல வேண்டும். நேற்றைய தினம் கூட தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

திமுக -வை அரசியல் எதிரி என்றும் பாஜக -வை கொள்கை எதிரி என்றும் முன்னிறுத்தி அரசியலை துவங்கிய விஜய் தனது ஒவ்வொரு நகர்வுக்கும் குறிப்பிட்ட கால நேரத்தை எடுத்துக்கொண்டு மிக பொறுமையாக தான் செயற்படுகின்றார் என்ற விமர்சனமும் அவர் மீது எழாமல் இல்லை. ஆனாலும் மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க இயலாது. 

8 மாதத்திற்கு முன்பே கூட்டணி!

இன்றைய அரசியல் சூழலில்  முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் “விஜய் Factor” எங்கே விஜய் -உடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்தது. மேலும் கூட்டணி அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில்,  எடப்பாடியை கூட்டணியின் தலைவர் என்றோ , அதிமுக தலைமையில்தான் ஆட்சியையும் அமையும் என்றோ உத்தரவாதமிக்க பேச்சுக்கள் எழாததால், கள அளவில்  இந்த கூட்டணி இணையவே இல்லை. அதனால்தான் திமுக துவங்கி அனைவரும் ‘பொருந்தா கூட்டணி’ என விமர்சித்தனர்.

எடப்பாடியின் ஆசை!!

ஆனால் எடப்பாடி எதாவது அதியசம் நடந்து பாஜக -வை விட்டு விலகி விட மாட்டோமா என வேண்டிக்  கொண்டிருக்கிறாராம். ஆனால் கொடநாடு, அதிமுக சின்னம் என அவர்கள் மீதும் ஏகப்பட்ட வழக்கு உள்ளது. அமித்ஷா -விற்கு 2026 -ல் பாஜக-அதிமுக வெற்றியைவிடவும் திமுக -வின் தோல்விதான் முக்கியம்.  மேலும் சசிகலா, டிடிவி, செங்கோட்டையன், ஓபிஎஸ் என அனைவரும் அதிமுக -வை பாஜக விடம் ஒப்படைக்க உழைத்தவர்கள் என்ற சர்ச்சையும் எழாமல் இல்லை.

ஆனால் விஜய் வந்தால் நிச்சயம் திமுக -வை வீட்டுக்கு அனுப்பலாம் என எடப்பாடி நினைக்கிறார், மேலும் தனக்கு இருக்கும் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் விட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் கூட விஜய் அதிமுக உடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக சொல்லியிருந்தார். அதனால், “எதற்கு எடப்பாடி இப்படி போய் கேட்டு அவமானப்படுகிறார்..?” என்றும் வசை பாடினர். 

தவெக -வின் உறுதி!!

அனால் யாருடனும் கூட்டணி இல்லை, என பாஜக மிக உறுதிபட கூறியுள்ளது. ஆனாலும் அதிமுக -வினர் கேட்பதை நிறுத்தவே இல்லை. த.வெ க வை காப்பாற்ற அதிமுகவால் மட்டும் தான் முடியும் என்ற முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் கருத்துவேறு தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தான் SIR -ஐ எதிர்த்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது, அப்போது, பேசிய கட்சியின் இணைப்பொது செயலாளர் சி.டி நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவினர்  அவர்களுடைய நோக்கத்தை மறந்துவிட்டு பேசுகிறார்கள், பிரதான எதிரி திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு எங்களை பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்கிறார்கள்.

யார்வேண்டுமானலும் கூட்டணிக்கு அழைக்கலாம் ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அதிமுக என்ற ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” மேலும் அவரிடம்  NDA உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உண்டா? என கேள்வி எழுப்பப்பட்டது, “எங்கள் கொள்கை எதிரி பாஜக என ஏற்கனவே சொல்லிவிட்டோம், பாஜக அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. கூட்டணி குறித்து ராகுல் காந்தி விஜய்யிடம் பேசினார் என்பது புரளியே. அப்படி பேசினார் நாங்கள் அதை பொதுவெளியில் தெரிவிப்போம். எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய் தான். Nda உடன் 1 சதவீதம் கூட கூட்டணி கிடையாது.” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.