சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் இருந்த 14 பவுன் நகை காணாமல் போனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.
அப்போது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டில் 24 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தமிழகத்தில் காவல்துறை ஆட்சி நடக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுகுறித்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் விசரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தனர் “அரசு தனது சொந்த குடிமகனையே கொன்றுவிட்டது” - கொலைகாரன் கூட இப்படி தாக்க மாட்டான் என காட்டமாக விமர்சித்தது.
தனிப்படை ஏன்?
கிட்டத்தட்ட இந்த வழக்கு ஒரு ஆள் கடத்தல் கொலை போன்றே நடந்துள்ளது. ஒரு முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறவில்லை. மேலும் ஒரு திருட்டு குற்றத்திற்கு ஏன் தனிப்படை வரவேண்டும், என பல முன்னுக்கு பின் முரணான சம்பவங்களே இங்கு நடந்துள்ளது. மேலும் எந்த சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. என்பதே உண்மை.
போராட்டத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.
எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு குடிமகன் காவல் துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரும் சர்ச்சியாகியுள்ளது. மேலும் காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மக்கள் அரசின்மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனை எதிர்க்கட்சிகள் மோசமாக கண்டித்து வருகின்றனர். “இந்த சம்பவத்திற்கு பிறகு அஜித் குமாரின் தாயாரோடு பேசிய எடப்பாடி, “தமிழகத்தில் போலீஸ் ஆட்சி நடக்கிறது” என கடுமையா விமர்சித்தார்.
கூட்டணி அமைத்ததிலிருந்து இணையாமல் இருந்த அதிமுக -பாஜக கூட்டணி இந்த அஜித் குமார் மரணத்திற்கு நீத்து கேட்டு நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணையவுள்ளது. மேலும் தவெக கட்சியின் தலைவர் விஜயும் அஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார். தவெக -வும் இத்தனியா கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளது. இது நிச்சயம் திமுக -விற்கு பின்னடைவுதான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.