தவெகவிலும் வெற்றி.. 'ஹாட்ரிக்' போட்ட மரகதம்.. சவாலில் வென்ற ஆதவ் அர்ஜுனா! 
தமிழ்நாடு

'ஹாட்ரிக்' போட்ட மரகதம்.. அதிமுகவில் விழுந்த இடி! சவாலில் வென்ற ஆதவ் அர்ஜுனா

தனது கல்லூரிக் காலம் முடிந்த உடனேயே அதிமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர் மரகதம் குமரவேல்.

மாலை முரசு செய்தி குழு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாகை சூடி மீண்டும் எம்.எல்.ஏவாக பதவியேற்கிறார் மரகதம் குமரவேல்.

2026 பொதுத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற இவர், தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிட்ட போது கடும் விமர்சனங்களை சந்தித்தார். எனினும் தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மீண்டும் வெற்றியடைந்துள்ளார்.

இது இவரது 3வது சட்டமன்ற தேர்தல் வெற்றி. கடந்த முறை அதிமுக சார்பாக போட்டியிட்டு 69,284 (34.95%) வாக்குகளைப் பெற்றவர், இந்த முறை 72,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதிமுக சுமார் 46,200+ வாக்குகளுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை 3 வது இடத்தில் இருந்த திமுக 52, 798 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இந்த தொகுதியில் திமுகவை விட 1 வாக்கு குறைவாக பெற்றாலும் அரசியலில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா திமுக வேட்பாளர் பரந்தாமனிடம் சவால் விட்டிருந்தார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மரகதம் தன்னை மிக ஆழமாக நிலை நிறுத்தியிருக்கிறார்.

மரகதம் குமரவேலின் தந்தை எம்.ஜி.ஆரிடம் பணியாற்றியவர். தான் ஜெயலலிதாவிடம் வளர்க்கப்பட்டவள் எனக் கூறிக் கொள்கிறார் அவர்.

தனது கல்லூரிக் காலம் முடிந்த உடனேயே அதிமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர் மரகதம் குமரவேல்.

2006-ல் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். 2011-ல் ஒன்றிய குழு தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

2014-ல் ஜெயலலிதாவால் காஞ்சிபுர நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்ட மரகதம், 2019 வரை மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து 2021, 2026 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். முதல்முறையாக ஜெயலலிதாவல் கைகாட்டப்பட்ட வேட்பாளர் என்பதற்காகவே மக்கள் ஒவ்வொருமுறையும் அவருக்கு வாக்களித்தனர். அந்த வாக்கு தான் கட்சி மாறினாலும் கிடைக்கும் என இடைத் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்