தமிழ்நாடு

“TVK-வா.. DRUGS வெற்றிக் கழகமா?” - நாகை மெத்தபெட்டமைன் பறிமுதல்.. "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குத் தொடர்பா?" தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!

தவெக முழுவதும் குற்றவாளிகள் தான். பாஜகவில் குற்றவாளிகள் எப்படி தஞ்சம் போவார்களோ அதே போன்று தவெக-விலும் இணைகிறார்கள்

Muthu Lakshmi

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். நாகையில், தவெக நிர்வாகியிடம் 137 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகளை அடுக்கினார் பரந்தாமன்.

அவர் பேசியதாவது, நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் தவெக நிர்வாகியிடம் இருந்து 137 கிலோ பெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு அரசின் சார்பில் வாய் திறந்து பேசவில்லை.,  காவல்துறை அறிக்கை வெளியிடவில்லை என்றார். தமிழ்நாடு அரசு இருக்கிறதா? காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. தவெக தலைவர் கட்சி தொடங்கிய பொழுது பல்வேறு கேள்விகளை ஆளும் அரசை நோக்கி எழுப்பினார். திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த குற்ற சம்பவத்தை வைத்து தவெக போல் திமுக அரசியல் செய்யாது… நாடு பற்றி எரியும் பொழுதும்.. முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. உங்கள் ஆட்சி காலத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பதற்காக டிஜிபி தலைமையில் இரண்டு முறை ஆபரேஷன் நடைபெற்றது.

மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டும் எந்த ஊடகமும் இதுகுறித்து வெளியிடவில்லை, விவாதிக்கவில்லை. தவெக போல் கீழ்த்தரமான அரசியல் செய்ய விரும்பவில்லை. போதைப்பொருள் புழக்கத்தில் பல்வேறு தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சியிலும் குற்றங்கள் நடைபெற்றது. ஆனால் NARRATIVE SET பண்ணுவது போல் நான் செட் பண்ண விரும்பவில்லை. இது TVK வா இல்லை DVK வா… தமிழக வெற்றிக்கழகமா அல்லது DRUGS வெற்றிகழகமா? என்ற கேள்வி எழுகிறது. முதலமைச்சர் அவர்களே, இளைஞர்களை ஓட்டு போடும் இயந்திரங்களாக பார்க்காதீர்கள். உங்களை நம்பி வாக்களித்த இளைஞர்களை ஏமாற்றுகிறீர்கள். போதை பொருள் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் கடத்தப்பட இருந்த நிலையில் பிடிபட்டுள்ளது. சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏன் வாய் திறக்கவில்லை. 

மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வருகிறது. மக்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். காவல்துறைக்கு வெட்கம் இல்லையா? உங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லையா? இளைஞர்களை போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டாமா? இரண்டு இடைத்தேர்தலில் பூபாலன் பணம் தான் பயன்படுத்தப்பட்டதா? தவெக அரசியல் கட்சிக்கு இவர்களை போன்றவர்களின் பணமா?  பூபாலனுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என கேள்வி எழுகிறது.

திமுக என்றும் ஜனநாயகத்திற்காக ஊடகத்தின் பக்கம் நின்றிருக்கிறது. ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகி இல்லை. தவெகவில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிர்வாகிகள் தான், தவெக அரசியல் அமைப்பாக வரவில்லை. அரசியல் இயக்கம் இல்லை ரசிகர் கூட்டம். தவெக முழுவதும் குற்றவாளிகள் தான். பாஜகவில் குற்றவாளிகள் எப்படி தஞ்சம் போவார்களோ அதே போன்று தவெக-விலும் இணைகிறார்கள். அதனால்தான் முதலமைச்சர் விஜய் தன் மனதிற்குள் இருப்பதை “பாஜகவின் கிளைக் கழகமாக தவெக இருக்கிறது” என சொல்லி இருக்கிறார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.