

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து பேர் கொண்ட DRI அதிகாரிகள் குழுவினர் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பூபாலனின் நண்பர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக ஐடி விங் செயலாளர் மு. முகமது அப்துல்லா வெளியிட்ட பதிவில், "திமுகவில் இருந்த ஜாபர்சாதிக் என்ற ஒருவன் மெத்த பெட்டமைன் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டான். அவன் ஒரு பொது இடத்தில் ( கவனிக்க.. என் வீடோ அல்லது அவன் வீடோ அல்லது என் அலுவலகத்திலோ அல்லது அவன் அலுவலகத்திலோ அல்ல! பொது இடம்) வைத்து எனக்கு சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்து ( கவனிக்க.. ஒரே ஒரு ஃபோட்டோ.. இரண்டாவது ஃபோட்டோவே அவனுக்கும் எனக்கும் இருக்காது, கிடைக்காது. காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பும் அவனை நான் பார்த்ததில்லை அந்த நிகழ்ச்சிக்கு பின்பும் அவனை நான் பார்த்ததில்லை) பொது இடத்தில் வைத்து சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நானும் போதைப் பொருட்கள் கடத்திவதாகவும் அவனோடு சேர்ந்து கென்யா போன்ற நாடுகளுக்கு நான் சென்றதாகவும் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யான செய்தியை புரோக்கர் சவுக்கு சங்கர் துவங்கி கிசுகிசு பாணியில் ஜூனியர் விகடன் வரை எழுதினார்கள்.
பிஜேபி அண்ணாமலையின் வார்ரூம் அடியாட்களும் விஜயின் ரூட்மாஃபியா கோஷ்டியும் இணையம் முழுவதும் அதை பரப்பினர்.. காலம் பதில் சொல்லும் என்று நான் அமைதியாகக் கடந்து விட்டேன். இப்போது தவெகவை சேர்ந்த பூபாலன் என்பவன் அதே மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி உள்ளான். முதல் அமைச்சர் விஜயோடேயே “நெருங்கிய” தொடர்புடையவன் என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது? அது மட்டுமின்றி விஜயின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கிரிக்கெட் கிரவுண்டில் “ஏதோ ஒரு” மாத்திரையை நசுக்கும் காணொளியே வந்தது!!
“இதன் மூலம் விஜய் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? அவர்களோடு இணைந்து அவரும் அந்தத் தொழிலை செய்கிறாரா? அந்தத் தொழிலில் ஈட்டிய பெரும் பணத்தால் தான் அவர் கட்சி துவங்கினாரா? அவர் வெளிநாடு சென்று வந்ததெல்லாம் இந்த தொழில் நிமித்தம்தான?” என்றெல்லாம் கேட்டு இப்போது புரோக்கர்கள் சவுக்கு சங்கர் , ஃபெலில்ஸ், தமிழா தமிழா பாண்டியன் போன்றோர்கள் விவாதித்து காணொளி வெளியிடுவார்களா? அவர்கள் உருவாக்கும் இந்த செய்தியை ரூட்மாஃபியாகள் இணையவெளி எங்கும் பரப்புவார்களா!!!?
வாருங்கள் உண்மைக்காக காத்திருப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.