tamilaga valvurimai kalagam velmurugan Admin
தமிழ்நாடு

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே வேல்முருகன்...அடுத்த கூட்டணி இவருடன் தானா?

அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் எப்பது தான் இப்போது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Anbarasan

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் செயல்பாடுகள் திமுக கூட்டணியையே பெரிய அளவில் ஆட்டம் காண வைத்துள்ளது. இவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் இருக்கும்? யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

திமுக தலைமை உடன் வேல்முருகனுக்கு இருக்கும் மோதல்கள், உரசல்கள் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது நெருப்பாக பற்றி எரியும் நிலைக்கு வந்து விட்டது. இதை வெளிப்படையாக சட்டசபையிலேயே, அமைச்சர் சேகர்பாபு தன்னை ஒருமையில் பேசியதாக வேல்முருகன் புகாராக தெரிவித்தார். ஆவேசமாக வேல்முருகன் குற்றம்சாட்டியதற்கு, முதல்வரே எழுந்து பதிலளித்தார். அதுவும், வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்வதாகவும், சபாநாயகர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேறு சொல்லி விட்டார். இதனால் திமுக-தமிழக வாழ்வுரிமை கட்சிகள் இடையேயான உரசல்கள் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

மேலும் படிக்க: சாதித்து காட்டிய முதல்வர் "MKS".. கலைஞர் மகன் என்பதை இன்று நிரூபித்த மு.க.ஸ்டாலின்!

என்ன இப்படி சொல்லிட்டார் வேல்முருகன்?

சரி கூட்டணி கட்சிக்குள் வழக்கமாக இது போன்ற கருத்து மோதல்கள் வருவது சகஜம் தான் என்று நினைத்தால், இன்று தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த வேல்முருகன், "நாங்கள் கூட்டணியில் இருப்பதை திமுக விரும்பவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக உள்ளோம். மு.க.ஸ்டாலின் முடிவு அதுவாக இருந்தால் சந்தோஷமாக கூட்டணியில் இருந்து இப்போதே வெளியேற தயாராக உள்ளேன்" என ஓப்பனாகவே உடைத்து பேசி விட்டார். இதனால் எந்த நேரத்திலும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை வேல்மருகன் அறிவிக்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இவரை சமாதானப்படுத்த, மீண்டும் இவரை திமுக தலைமை அழைத்து பேசுமா என்பது தனி விவகாரம். ஆனால், வேல்முருகன் என்ன நினைக்கிறார்? அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் எப்பது தான் இப்போது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தேமுதிகவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா மு.க.ஸ்டாலின்?

வேல்முருகனின் அடுத்த நகர்வு என்ன?

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறினால், அவர் மீண்டும் பாமக.,வில் சென்று சேருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காரணம் ஏற்கனவே வேல்முருகன் பாமக.,வில் அன்புமணி ராமதாசிற்கு வலது கரமாக இருந்து செயல்பட்டு, பாமக.,வை வலுப்படுத்தியவர். தற்போது பாமக.,வின் நிலையும் சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு அன்புமணிக்கு தளபதி போல் இருந்து கட்சியை வழிநடத்துவதற்கு வலிமையான தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் என்று யாரும் கிடையாது. இந்த சமயத்தில் வேல்முருகன் பாமக.,விற்கு திரும்பினால் அது நிச்சயமாக பாமக.,விற்கு மிகப் பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக வன்னியர்கள் ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வேல்முருகனின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

வேல்முருகன், பாமக.,வில் இருந்த போது ஆக்டிவான அரசியல்வாதியாகவும், இளம் தலைவராகவும் வலம் வந்தவர். இளைஞர்களை வசீகரிக்கும் அளவிற்கு நன்கு பேசக் கூடிய பேச்சாளரும் கூட. அதனால் பாமக கடந்த சில ஆண்டுகளில் இழந்த பலத்தை மீண்டும் பெறுவதற்கு வேல்முருகனின் வருகை கண்டிப்பாக உதவியாக இருக்க வாய்ப்புள்ளது.

இவருடன் கூட்டணியா?

அப்படி ஒருவேளை பாமக.,விற்கு திரும்ப வேல்முருகன் விரும்பவில்லை என்றால் சீமானுடன் இணைந்து, புதிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரின் கொள்கைகளும் ஏறக்குறைய ஒத்துப் போகக் கூடியது என்பதால் இவர்களின் கூட்டணி நிச்சயம் வட மாவட்டங்களில் திமுக, அதிமுக.,விற்கு நெருக்கடியாக அமையும். வட மாவட்டங்களில் வேல்முருகன் மீண்டும் சுற்றுப் பயணம் வந்தாலே, அவர் ஆதரிக்கும் கட்சி அல்லது நபருக்கு ஓட்டுக்கள் கணிசமாக வந்து குவிந்து விடும். அவர் அளவிற்கு திமுக மற்றும் அதிமுக.,வில் வட மாவட்டங்களில் பலமான, செல்வாக்கான ஆள் யாரும் இல்லை என்பதால் சீமான் கட்சிக்கும் அது மிகப் பெரிய பலமாக இருக்கும்.

இளைஞர்களை ஈர்க்கும் கூட்டணி :

அதே போல் வேல்முருகன், விஜய்யுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. விஜய்யின் செல்வாக்கும், வேல்முருகனின் அரசியல் அனுபவம், பேச்சுத்திறமை ஆகியவையும் சேரும் போது இளைஞர்கள் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக அள்ளுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு வட மாவட்டங்களில் விஜய் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து விட்டது. இப்போது வேல்முருகன் அவருடன் கைகோர்த்தால் அது குறிப்பிட்ட சமூக ஓட்டுக்களையும் பெறுவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்