தமிழ்நாடு

“நம்பிக்கை துரோகம் செய்யும் பாஜக, திமுக” - தவெக பொய்யான வாக்குறுதி கொடுக்காது.. கேட்குதா சிஎம் சார்.. அரியலூரில் விஜய்!

ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கும் திட்டம். அப்போது தானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலையை சுலபமாக செய்ய முடியம்.

Mahalakshmi Somasundaram

திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அரியலூர் வந்தடைந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் “ காலையில் திருச்சியில் பேசும் போது மைக் ரிப்பேர் ஆகிவிட்டது அதனால் அங்கு பேசிய சில விஷயங்களை இங்கு பேசியுள்ளேன், இங்கு என்னை பார்க்க வந்த அம்மாக்கள், அக்காக்கள், அண்ணன்கள், தம்பிகள், உங்களை பார்க்க வந்தது மகிழ்ச்சி, உங்களின் அன்பிற்காக எதை வேண்டுமானாலும் தூக்கி போட்டுவிட்டு வந்து விடலாம். சாதாரண விஜய்யாக இருந்த என்னை இப்படி மாற்றியவர்கள் நீங்கள்தான். அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை.

நீங்கள் கொடுத்த அன்பிற்கு உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். நம்மை ஆண்டு கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்பதற்காக வந்திருக்கேன். பாஜக அரசு கொஞ்சம் நஞ்சமா செய்கிறது பீகாரில் 65 லட்சம் ஓட்டாளர்கள் ஓட்டு திருட்டு, வீட்டு எண் 0 என போட்டு வாக்காளர் அட்டை கொடுத்திருக்கிறார்கள். “ONE NATION ONE ELECTION” 2029 இவர்களின் ஆட்சி காலம் முடிய போகிறது, எனவே மாநில அரசுகளையும் களைத்து விட்டு ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கும் திட்டம். அப்போது தானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலையை சுலபமாக செய்ய முடியம்.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பாஜக அரசு செய்யும் துரோகம், பாஜக அரசு தான் துரோகம் செய்கிறது என பார்த்தால், இங்கு தமிழகத்தில் திமுக அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள். கிட்ட தட்ட நான் நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் இவர்களை தேர்ந்தெடுத்தோம். ஆனால் இவர்கள் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள் அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள்? எல்லாம் நிறைவேற்றி விட்டும் என கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்.. கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் கொடுத்தீர்களா.. அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் கொடுத்தீர்களா.. கல்வி கடனை ரத்து செய்தீர்களா.. நீட் தேர்வை ரத்து செய்தீர்களா.. பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்தீர்களா..

மீனவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தீர்களா.. நெசவாளர்களுக்கு வட்டி குறைத்தீர்களா.. 75 % தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தீர்களா.. இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தீர்களா.. கேள்விகேட்டு கொண்டே இருந்தாலும் பதில் மட்டும் வருவதில்லை, பஜாக செய்வது துரோகம் என்றால் நீங்கள் செய்வது நம்பிக்கை மோசடி இதனால் தான் மறைமுக உறவினர்கள் என சொல்கிறோம். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமையாதது ஏன்?

ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு ரயில் பாதை அமைக்கும் கோரிக்கை என்ன ஆனது? முந்திரி தொழில் உற்பத்திக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அரியலூரில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாதது ஏன்? தமிழக வெற்றி கழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம், தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம் ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி இது தான் தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம்” என கூறி தனது உரையை முடித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.