தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் எத்தனையோ பாதகமான சாத்தியங்களைக் கடந்து வெற்றி பெற்றது தமிழக வெற்றிக் கழகம். சட்டமன்றத்தில் கூட்டணி இல்லாமலேயே தனிப்பெரும்பாண்மை பெற அடுத்தடுத்த இடைத்தேர்தல்களையும் தவெக வெல்ல வேண்டியது அவசியம்.
இன்று புதுக்கோட்டை, விராலிமலையில் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டதும் இடைத்தேர்தலை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இடைத்தேர்தல் நடக்கப்போகும் தொகுதிகளுக்குப் பயணிப்பார் எனக் கூறப்படுகிறது.
அதேப்போல திமுக, அதிமுக, நாதக கட்சிகளும் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் சராசரியை விட அதிக வாக்கு வாக்கு வாங்கும் சீமான், இந்த இடைத்தேர்தலில் களமிறங்க முடிவு செய்து, தன்னை அம்பாசமுத்திரம் தொகுதியின் வேட்பாளராக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சீமானுக்கு ஆதரவளிக்க திமுக முகாம் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. தவெகவின் வெற்றி வாய்ப்பை குறைக்கவும் சட்டமன்றத்தில் விஜய்க்கு எதிராக சீமானை முன்நிறுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இடைத்தேர்தல் நடக்கப்போக்கும் தொகுதிகளில் ஏற்கெனவே திமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக்கு உட்பட்டதாகத்தான் உள்ளது. அரசமைந்த பிறகு கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் இழந்துள்ளது. இந்த சூழலில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினிடம் சீமானுக்கு ஆதரவு உண்டா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அதனை மறுக்காமல் "இடைத்தேர்தல் தேதி அறிவித்தபிறக்கு பார்க்கலாம்" என்றார். இது ஒருவேளை கூட்டணி அல்லது ஆதரவு உருவாக்கிறாதா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.
தசாப்தகாலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்த சீமான் இந்த ஆதரவை ஏற்கிறாரா இல்லையா என்பதும் கேள்விக்கு உட்பட்டது. ஆனால் இப்போது தவெகவை எதிர்க்க திமுகவும் அதிமுகவும் கூட ஒன்றிணையவும் வாய்ப்புகள் எழுந்துள்ளன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துக்கள் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
அவர், "இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி சாதாரணமாக வரவில்லை டிபன் பாக்ஸில் 500 ரூபாய் கொடுத்திருக்கின்றனர். கூட்டணி கட்சிகளால் வாக்குகள் கிடைத்திருக்கிறது." என விமர்சித்தார்.
அவரிடம், 'அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து "தேர்தல் அறிவிக்கட்டும்" என்றார் ஸ்டாலின், அதிமுகவின் நிலைப்பாடு என்ன' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் தான் எங்களுடைய பதிலும். தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அவருக்கு ஆதரவா இல்லையா என்பதை பிறகு முடிவு செய்வோம்." என்றார்.
மீண்டும், 'தவெக ஆட்சிக்கு எதிராக 65% வாக்குகள் உள்ள நிலையில், அந்த வாக்குகளை வைத்துள்ள எதிர்க்கட்சிகள் சேர்ந்து களம் கண்டால் மட்டும் தானே வெல்ல முடியும் என்கின்றனர். எதிர்க்கட்சிகள் சேர வாய்ப்பிருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பட்டது.
அப்போது, "அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். எதிர்க்கட்சிகள் சேர்ந்து தான் வியூகம் அமைத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்." என்றார்.
இந்த பதிலால் தவெகவை வீழ்த்த திமுக - அதிமுக இணைந்து வியூகம் வகுக்க தயாராக இருக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.