தமிழ்நாடு

உதகமண்டலம்.. 'மலைகளின் அரசி'யில் விஜய்யின் வருகையால் விளையப்போகும் மாற்றம்! மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கணிப்பு!

அதிமுக 90 பூத்களில் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. திமுக 80 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் உதகமண்டலம் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாளங்கள்:

இங்கு 10.07% இளம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 52.4% ஆக உள்ளனர். சமூகக் கட்டமைப்பில் படுகர் சமூகம் 26%, ஆதிதிராவிடர்கள் 23%, முக்கலிக கவுண்டர்கள் 12% என உள்ளனர். குறிப்பாக 23% மலையாள மொழி பேசும் வாக்காளர்கள் இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

உள்ளூர் பிரச்சனைகள்:

சுற்றுலாத் தலம் என்பதால் சீசன் நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இப்போதும் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. நகராட்சிப் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சீராக இல்லை. கேரட், உருளைக்கிழங்கு போன்ற மலைப் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது விவசாயிகளின் அதிருப்திக்குக் காரணமாக உள்ளது. காட்டுப் பன்றிகள் மற்றும் விலங்குகளால் பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாக உள்ளது.

உதகமண்டலம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் வரலாறு:

2021-ல் காங்கிரஸ் (திமுக கூட்டணி) 46.9% வாக்குகளைப் பெற்றது, 2024-ல் அது 49.1% ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 43.1% பெற்றிருந்தது, 2024-ல் 43.8% ஆகத் தனது வாக்குகளைத் தக்கவைத்துள்ளது. நாம் தமிழர் 5.3% வாக்குகளைப் பெற்றுள்ளது.

2026 கணிப்பு:

2026-ல் அதிமுக 90 பூத்களில் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. திமுக 80 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. 35 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. கணிப்பின்படி, அதிமுக 37% வாக்குகளையும், திமுக 35% வாக்குகளையும் பெறும். விஜய் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 22% வாக்குகளைப் பிரிக்கும். மலையாள வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு திமுகவின் வாக்கு வங்கியில் கைவைக்கும் என்பதால், சுமார் 2% வித்தியாசத்தில் உதகமண்டலம் தொகுதி அதிமுக வசம் செல்ல வாய்ப்புள்ளதாகக் கான்சிலிடிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.