உடுமலைப்பேட்டை.. அசைக்க முடியாத கோட்டையில் 'உடுமலை ராதாகிருஷ்ணன்'! ஹாட்ரிக் வெற்றியைத் தடுக்குமா திமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் அதிரடி கணிப்புகள்!

2026 தேர்தலில், 115 பூத்களில் அதிமுக மீண்டும் வலுவாக இருக்க வாய்ப்புள்ளது. திமுக 95 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது
Udumalpet constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான தொகுதியான உடுமலைப்பேட்டை, கடந்த சில தேர்தல்களாக அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை நிரூபித்து வருகிறது.

வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:

உடுமலைப்பேட்டை தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளம் தலைமுறை வாக்காளர்கள் 10.78% ஆக உள்ளனர். 52.25% பெண் வாக்காளர்களுடன் பெண்களின் வாக்கு வங்கி இங்கு மிகவும் வலுவாக உள்ளது. சமூக ரீதியாகப் பார்த்தால், வெள்ளாள கவுண்டர்கள் 27%, அருந்ததியர்கள் 18% மற்றும் செட்டியார் சமூகத்தினர் 14% எனப் பரவலாக உள்ளனர். இவர்களைத் தவிர முஸ்லிம்கள் 5%, கிறிஸ்தவர்கள் 4% மற்றும் மற்ற சமூகத்தினர் 32% அளவில் உள்ளனர். இது பிரதானமாக ஒரு விவசாயம் சார்ந்த கிராமப்புறத் தொகுதியாகும்.

முக்கிய உள்ளூர் பிரச்சனைகள்:

திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதில் நிலவும் சிக்கல்கள் விவசாயிகளின் நீண்ட காலப் புகாராக உள்ளது. தென்னை விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் மற்றும் தேங்காய் விலையில் ஏற்படும் வீழ்ச்சி ஆகியவை இப்பகுதியின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து வரும் கால்வாய்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைகளின் ஊடுருவல் மற்றும் பயிர்ச் சேதங்கள் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

உடுமலைப்பேட்டை தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
Udumalpet constituency

தேர்தல் வரலாறு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் 50.2% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 38.9% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 48.1% ஆகத் தனது நிலையை உயர்த்தியுள்ளது. அதே சமயம் அதிமுக 41.2% ஆகச் சரிந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 4.4%-லிருந்து 5.5% ஆகத் தனது வாக்குகளைச் சற்று உயர்த்தியுள்ளது.

2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:

வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2021-ல் அதிமுக 110 பூத்களில் வலுவாக இருந்தது, தற்போது அது 99 ஆகக் குறைந்துள்ளது. திமுக 89 பூத்களிலிருந்து 119 ஆகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. வரும் 2026 தேர்தலில், 115 பூத்களில் அதிமுக மீண்டும் வலுவாக இருக்க வாய்ப்புள்ளது. திமுக 95 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. சுமார் 60 பூத்கள் ஸ்விங் பூத்களாக உள்ளன. இத்தொகுதியில் செட்டியார் சமுதாய வாக்குகள் அதிமுக வேட்பாளருக்குச் சாதகமாக இருப்பது ஒரு முக்கிய காரணியாகும்.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 முன்கூட்டிய கணிப்பின்படி, அதிமுக 38% வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 34% வாக்குகளைப் பெறக்கூடும். நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 24% வாக்குகளைப் பிரிக்கும். வெற்றி வித்தியாசம் சுமார் 3% முதல் 4% வரை இருக்கும். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக போன்ற கட்சிகள் இணையும் பட்சத்தில் இந்த வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com