Udhayanidhi Stalin controversy 
தமிழ்நாடு

“உதயநிதி பால்டாயில் குடித்ததாக சொல்றாங்க.." - எதிர்க்கட்சி தலைவரை சீண்டிய நிர்மல் குமார்! சலசலக்கும் அரசியல் வட்டாரம்

"எல்லோரும் சமூக ஊடகத்தில் பார்த்தோம் என்று பதிவிடுகிறார்கள்.. உதயநிதி 'பால்டாயில்' குடித்தார் என்று சமூக ஊடகத்தில் இருக்கிறது. அதை நாங்கள் கேட்க முடியுமா?"

Vinvizhi Leninton

மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவை அமைச்சர் நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "சோஷியல் மீடியாவில் பார்த்தேன் என்று அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். அதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி 'பால்டாயில்' குடித்தார் என்று இருக்கிறது. அதை நாங்கள் கேட்க முடியுமா?" என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவை அமைச்சர் நிர்மல் குமார் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசு சார்பாக தொடங்கி வைத்ததாகவும், புத்தக திருவிழாவில் பல முன்னணி வெளியீட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், சென்னையை போல பிரமாண்டமான புத்தக கண்காட்சியை மதுரையிலும் நடத்தவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய 'அகல் விளக்கு' வெளியீடு மட்டுமே இந்த முறை தவறி இருப்பதாக சிரித்த வண்ணம் தெரிவித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர், "வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை" என்று திருமாவளவன் கூறியதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், வழக்கறிஞர் நியமனம் சுதந்திரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசு வழக்கறிஞர்கள் என்பவர்கள் அரசு சார்பாக, மக்கள் சார்பாக நின்று போராட கூடியவர்கள். பழைய ஆட்சியில் பணம் வாங்கிக்கொண்டு போட்டார்களே.. அதுபோல இல்லாமல், தகுதியானவர்களை சுதந்திரமாக நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேகதாது அணைக் குறித்து கேட்ட கேள்விக்கு, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். இவ்விஷயத்தில் அந்த அரசு அடவாடியாக செயல்பட்டால், அது இந்திய அரசின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். மத்திய அரசு இதை அனுமதிக்க கூடாது என்று பேசினார். பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தினை குறித்து கேட்ட கேள்விக்கு, நவம்பர் 17-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால் அதனைக்குறித்து தற்போது பேசவேண்டாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி MLA விவரத்தினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஒரு பெண் அதிகாரியின் புகைப்படத்தினை அனுமதியில்லாமல் எல்லாரும் பயன்படுத்தினீர்கள். அது எவ்வளவு பெரிய தவறு என்று உங்கள் எல்லாருக்குமே நன்றாக தெரியும். ஜெம் வீரமணி வழக்காக இருக்கட்டும் திமுக ஆட்சி காலத்தில் பணத்தினை பெற்றுக்கொண்டு தப்பிக்கவிட்டனர். தற்போது அந்த வழக்கு ஒவ்வொரு படிநிலைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுக சார்பில் யார் தப்பிக்கவைத்தார்கள்?, அந்த அதிகாரத்தை திமுகவில் இருந்து யார் கொடுத்தார்கள்?, இது குறித்து ஸ்டாலின் இன்னும் பதில் சொல்லவில்லை. ஜெம் கிரானைட் வீரமணியின் வழக்கில் ஒன்றரை வருடங்களாக கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர் (ஸ்டாலின்) பக்கத்திலேயே இரண்டு தெருவினை தள்ளி தூங்கிக்கொண்டிருந்தாரா?" என்று காட்டமாக பேசினார்.

மேலும் பேசிய அவர், "எல்லோரும் சமூக ஊடகத்தில் பார்த்தோம் என்று பதிவிடுகிறார்கள்.. உதயநிதி 'பால்டாயில்' குடித்தார் என்று கூட சமூக ஊடகத்தில் இருக்கிறது. அதை நாங்கள் கேட்க முடியுமா?. இதுபோல எல்லாரும் சமூக ஊடகத்தில் பார்த்தேன் பார்த்தேன் என்று பதிவிட்டுக்கொண்டிருந்தால்.. அவங்க அப்பாவை பற்றி நிறைய இருக்கிறது அது பற்றி பேசமுடியுமா? என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், இது திமுகவின் 'திசைதிருப்பல் உத்தி' என்றும் அதனை உங்களுக்கே தெரியாமல் செய்கிறீர்கள் என்றும் பத்திரிகையாளர்களை நோக்கி கூறினார்.

ஏற்கனவே இதுபோல, தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி உதயநிதியை குறித்து இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.