udhyanidhi stalin Tharapuram Election Campaign 
தமிழ்நாடு

"திருப்பி என்னை தஞ்சாவூருக்கு அனுப்புறத்துக்கா.. அதை சொன்னா என் மேல கேஸ் போட்டுடுவாரு" - உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

ஏற்கனவே என் மேல ஒரு கேஸ் இருக்கு, தண்ணி வரலைன்னு சொன்னேன் அதுக்கு அவருக்கு கோபம் வந்துருச்சி...

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் வரும் (அக் 06) ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து இன்று எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் சட்டமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாட்டு பாடியதை மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் பார்க்க திரை கேட்டது உள்ளிட்டவற்றை விமர்சித்தார். இதற்கிடையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய் திறந்து பேசியதாக சரித்திரமே இல்லை என எதிர்க்கட்சி தலைவர் கூற அதற்கு கீழே இருந்த தொண்டர்கள் சில கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனை கேட்ட உதயநிதி “நீங்க எதாவது சொல்லிட்டு போயிடுவீங்க.. அப்புறம் அந்த ஆளுக்கு கோபம் வந்து என் மேல கேஸ் போட்ருவான்” என மறைமுகமாக தஞ்சாவூர் காவிரி விவகாரத்தை கூறியது தொண்டர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர் ‘ஏற்கனவே என் மேல ஒரு கேஸ் இருக்கு.. தண்ணி வரலைன்னு சொன்னேன் அதுக்கு அவருக்கு கோபம் வந்துருச்சி.’ என தெரிவித்தார். மேலும் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டால் ஆளும் கட்சி பதில் சொல்லவேண்டும் ஆனால் இங்கு அனைவரும் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். என கவுன்சிலர் சிந்து, பல்லவி மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பாட்டு பாடியதை விமர்சித்திருந்தார்.

இது குறித்து சட்டமன்றத்தில் பேசியதை நினைவு கூர்ந்த அவர் “நான் சட்டமன்றத்திலேயே கேட்டேன்.. சபாநாயகர் அவர்களே எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது.. நாங்கள் சட்டசபைக்கு வந்திருக்கிறோம் அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கோம் என கேட்டேன்” என்று பேசினார். தொடர்ந்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ‘முதல்வர் முகத்தை பார்க்க முடியவில்லை.. அவர் முகத்தை பார்க்க தான் நாங்கள் சட்டமன்றத்திற்கு வருகிறோம்.. அதற்கு எதுவாக திரை அமைத்து கொடுங்கள்’ என கேட்டதையும் கடுமையாக சாடினார்.

மேலும் சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் தனக்கு பதவி கொடுத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த போது “எனக்கு வேலையில்லாமல் இருந்தேன்.. வேலை கொடுத்தார்.. கார் கொடுத்தார். அதற்கு நன்றி” என பேசி தனது காதல் தோல்வி பற்றி பகிர்ந்திருந்தார். இதனை விமர்சித்த உதயநிதி இது தான் நீங்கள் கேட்ட மாற்றமா..இல்லை மிகப்பெரிய ஏமாற்றமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே கீழே இருந்த தொண்டர்கள் “லண்டன்.. லண்டன்..” என கூச்சலிட்டனர்.

இதனை கேட்டு சிரித்த எதிர்க்கட்சி தலைவர் அதை பற்றி எல்லாம் இப்போது பேச முடியாது என்று “திரும்பவும் என்னை தஞ்சாவூர் அனுப்புவதற்கா?” என கேட்டார். தொடர்ந்து திட்டங்கள் மற்றும் தவெக கொடுத்த வாக்குறுதிகளை பற்றி பேசிய அவர் எப்போது இதனை அரசு நிறைவேற்ற போகிறது என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த பரப்புரையில் காவிரி விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நகைச்சுவையாக மீண்டும் மீண்டும் அவர் பேசிய சம்பவம் தொண்டர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்