முத்துராமலிங்கதேவரின் 118வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய தலைவர்கள் மதுரையில் கூடியிருந்தனர். இதில் தமிழிகக் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் செங்கோட்டையன், பாஜக -வின் நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பசும்பொன்னில் கூடி அங்குள்ள தேவர் சிலைக்கு மரியாதையை தெரிவித்தனர்.
அப்போது, வெளியே வந்து அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார், அப்போது திடீரென அங்கு வந்த மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ சீமானுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். “சமத்துவ தலைவர், தென்னாட்டின் நேதாஜி தேவர் அவர்களின் பிறந்த நாளில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக, சகோதர பாசத்தோடு வாழ வேண்டும். அத்தகைய மாபெரும் தலைவருக்கு வீர வணக்கம் செலுத்தக்கூடிய இந்த நேரத்தில், தமிழகத்தின் தன்மானத்திற்கும் வீரத்திற்கும் ஊற்றாக இருக்கக்கூடிய செந்தமிழன் சீமான் அவர்களோடு உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து இருவரும் ஒன்றாக தோன்றியுள்ளீர்களே என செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு உடனே வைகோ “அவர் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது இரவோடு இரவாக வந்து பார்த்தார், அவருக்கு ஏதாவது என்றால் நானும் செல்வேன்” என பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென இது தொடருமா? என்ற “கேள்விக்கு நிச்சயம் தொடரும்” என பதில் சொல்லி சென்றார்.
சின்ன ரீவைண்டர்!
சீமானும் வைகோவும் பொது மேடைகளில் தோன்றுவது அரிது என்றாலும், சீமான் பேசும் தமிழ் தேசியமும், வைகோ -வின் அரசியல் நிலைப்பாடும் வெவ்வேறானது. அதோடு திமுக கூட்டணியில் தற்போது வரை மதிமுக நீடித்து வருகிறது. மேலும் மல்லை சத்யா விவகாரத்தின் போதே திமுக -வுக்கும் மதிமுக -வுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையே ஏற்பட்டிருந்தது.
சீமான் பல காலமாகவே திமுக -வை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுக -வை வீட்டிற்கு அனுப்புவதே தனது கொள்கை என்பதை மேடைகள் தோறும் பேசிவருகிறார்.
இப்படி கூட்டணிக்கு எதிராக உள்ள சீமானோடு நட்பு பாராட்டுவது திமுக தலைமையை கடுப்பேற்றும் என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உடைகிறதா கூட்டணி!?
திமுக -வுக்கும் மதிமுக -வுக்கும் இடையேயான பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. ஏனெனில் குருபூஜையில் தமிழக முதல்வரும் பங்கெடுத்திருந்தார். ஆனால் அவரை மேலும் துரை வைகோ, பாஜக பக்கம் சாயக்கூடும் என்ற செய்திகளும் உலவி வருகின்றன.
ஆனால் ஒருவேளை திமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறினால் அல்லது வெளியேற்றப்பட்டால் அது திமுக -விற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது.ஆனால் அவர்கள் பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டால், அப்போது திமுக -விற்கு தலைவலிதான் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.