“தம்பி நா அவரு அப்பா...” தவெக -வில் அதிரடியாக நுழையும் எஸ்.ஏ.சி -ன் மாஸ்டர் பிளான்!! என்ன பொறுப்பு தெரியுமா!?

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது.
“தம்பி நா அவரு அப்பா...” தவெக -வில் அதிரடியாக நுழையும் எஸ்.ஏ.சி -ன் மாஸ்டர் பிளான்!! என்ன பொறுப்பு தெரியுமா!?
Published on
Updated on
2 min read

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு பிறகு தற்போதுதான் தமிழக வெற்றி கழகம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இது சம்பந்தப்பட்ட வழக்குகள் சிபிஐ -க்கு மாற்றப்பட்டு, அவை உச்சநீதிமன்றத்தில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக வெற்றி கழகம்  “Silent Mode” -ல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.  மேலும் சம்பவம் நடந்து பல நாட்களாகியும் விஜய் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறாதது, கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. 

ஆனாலும் 2 நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் கரூருக்கு செல்லமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு விஜய் மக்களை சந்தித்துள்ளார், மேலும் மாவட்ட அளவில் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.  ஓரளவிற்கு பட்ட அடியிலிருந்து மீண்டு தவெக இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என சொல்லாம். 

இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியில்லை!

தமிழக வெற்றி கழகத்தில் நிலவும் மற்றுமொரு பெரிய சிக்கல் அங்கே விஜய் தான் தலைவர் முகம். அவரோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் இரண்டாம் கட்ட முன்றாம் கட்ட தலைவர்களாக அறியப்படுகின்றனர். அது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. மேலும் ஆனந்தின் தலைமறைவானது  கட்சிக்கு பின்னடைவை தந்தது. மேலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நபராக ஆனந்த் உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் கூட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆனந்த் கட்சியைவிட்டு நீக்கப்படுவாரா? என்ற கேள்வியும் சில நாட்களுக்கு முன்னரே எழுந்துவிட்டது. 

ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய நிர்வாகிகள் பட்டியலில் ஆனந்த்  பெயர் முதலில் இடம் பிடித்துள்ளது.  மேலும் அவர் பொதுச்செயலாளராகவே தொடர்கிறார், மேலும் நேற்றைய நிர்வாகிகள் கூட்டமும் அவர் தலைமையில்தான் நடைபெற்றது. ஆனாலும் ஆனந்திடம் இருக்கும் பொறுப்புகள் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. 

இறங்கி அடித்த எஸ்.ஏ.சி!!

புஸ்ஸி ஆனந்துக்கான அதிகாரங்களை குறைக்கும் வகையில் சரியான நபரை விஜய் தேடி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சிக்குள் வருகை கொடுத்திருக்கிறார். கொள்கை பாடல் வெளியீடு, கொடி அறிமுகம், மாநில மாநாடுகளில் மேடையில் இடம் கொடுக்கப்படாத எஸ்ஏ சந்திரசேகருக்கு மாநாட்டின் பார்வையாளர்களில் முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாத காலமாக கட்சியில் நடந்த நிகழ்வுகள் குறித்து எஸ்ஏ சந்திரசேகர் விஜயிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆனந்தை ஒரேடியாக கட்சியை விட்டு நீக்க முடியாது என்பதால் அவருக்கான அதிகாரங்களை குறைக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை இல்லாத வகையில், அவை தலைவர் பொறுப்பு எஸ்ஏ சந்திரசேகருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் உலாவுகின்றன. ரசிகர் மன்றமாக இருந்த போதும் அதை மக்கள் இயக்கமாக மாற்றிய போதும் சந்திரசேகர் தான் முழு பொறுப்பையும் ஏற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com