ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளிவந்த செய்திகளால் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்ற செயல்களை மூடி மறைப்பதற்கு பல கோடி மதிப்பிலான பணம் கை மாறியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழில் அதிபர் வீரமணி 6 முதல் 16 வயது சிறுமிகளை, பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய புகார் ஒன்று வந்தது. அத்துடன் ஒரு பென்டிரைவும் கிடைத்துள்ளது. அதில் இருந்த வீடியோவே வந்த வழக்கில் முக்கிய ஆதராமாக மாறியது. ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை மறுத்த நீதிமன்றம் வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
விசாரணையில் தேனாம்பேட்டையில், வீரமணி எடுத்துக் கொடுத்த வாடகை வீட்டில் தங்கி, சிறுமிகளை ஏமாற்றி செய்து, அவர்களை படிக்கவைப்பதாகவும், புத்தாடை மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து இந்த கொடூர சமபவன்கள் அரங்கேறியது தெரியவந்தது. மேலும் வீரமணியின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் சிறுமிகளின் பாலியல் வீடியோக்களை வைத்திருந்ததாக வீரமணியின் உதவியாளர் கணேசன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இருந்து சுமார் 70 கோடி அளவிலான பணம், பல்வேறு அரசியல் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு கைமாறியதும் விஸ்ரானியில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த பண விவகாரத்தில் நேற்று, தெற்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, பிரகாஷுக்கு, சென்னை போலீசார் சம்மன் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். பிரகாஷ் வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பெருநகர சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து, வழக்கை மூடிமறைக்கவோ, தாமதப்படுத்தவோ முயன்ற நபர்கள் மற்றும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விடாமல் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, ஆணையர் வழக்கில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்