இத்தனை சிறுமிகளா? பங்களாவில் நடந்த "அட்டூழியம்".. நெட்வொர்க் அமைத்து செயல்பட்டாரா "ஜெம் கிரானைட்ஸ் வீரமணி"?

போயஸ் கார்டன் பகுதியில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து, அங்கு தனது தொழில் கூட்டாளிகளுக்காக...
gem veeramani
gem veeramani
Published on
Updated on
2 min read

பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் வீடியோ அடங்கிய ஆதாரம் தன்னார்வ தொண்டு நிறுவனம் கொடுத்ததை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2025 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் மறுவிசாரணை நடத்தியதில், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரது வாக்குமூலம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான வீரமணி, மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உதவியாளர் சாந்தி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த (ஆக 29) ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில், போயஸ் கார்டன் பகுதியில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து, அங்கு தனது தொழில் கூட்டாளிகளுக்காக சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாந்தி மகேந்திரசிம்மன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் மூலமாக சிறுமிகளை அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி அறக்கட்டளை மற்றும் ஆசிரமங்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் மூலம் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் உள்ளிட்டோர் அணுகப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு ஆடைகள், செலவுக்குப் பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன், அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கான செலவுகளை வீரமணி ஏற்றுக்கொள்வார் எனக் கூறி, போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்றதாகவும், வீரமணியின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளுக்காகவும் அந்த பங்களாவில் சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 15 க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் இந்த வலையமைப்பில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வீரமணி வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் பணபரிவர்த்தனையை மட்டும் விசாரிக்க கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரமணியை கைது செய்யாமல் இருக்க பல கோடி பணம் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் தற்போது வீரமணியின் உதவியாளர் கணேசன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீரமணி தனது பெயர் வெளியில் வராமல் இருக்க உதவியாளர் கணேசன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் வீரமணி நிறுவனத்தில் பணிபுரிந்த கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனில் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வீரமணி இவ்வாறு சிறுமிகளை அழைத்து வர ஷாந்தி அவரது கணவர் மகேந்தரசிம்ஹன் மற்றும் பிரசாந்தை மட்டும் தான் நெட்வொர்க் போல அமைத்து பயன்படுத்தினாரா அல்லது இதில் வேறு யார் யார் சம்மந்தப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com