விஜய், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை.. துபாயில் கைமாறிய ரூ.1000 கோடி! 'Hutsun சேர்மன்' சந்திப்பில் மர்மம்.. அப்பாவு வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? AI Generated
தமிழ்நாடு

விஜய், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை.. துபாயில் கைமாறிய ரூ.1000 கோடி! 'Hatsun சேர்மன்' சந்திப்பில் மர்மம்.. அப்பாவு வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

ஆந்திர நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க 'ரெட்டி கேங்' இப்போது முதலமைச்சரை அந்த மாநிலத்துக்கு அழைத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார் அப்பாவு.

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திரா சென்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க புறப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சரும் ஆந்திரா முதலமைச்சரும் இணைந்து திமுகவுக்கு எதிரான கட்சியை அமைக்க திட்டம் தீட்டியதாக பகீரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Appavu

இதுகுறித்த அவரது பதிவில், "தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய், ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா CMsir ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடக்காமல் இருக்க இதுவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். "நடிகர் விஜயால் கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ஆவின் பால் தட்டுப்பாடுக்கும் ஆந்திர முதலமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில் விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா CM sir .. ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Hatsun Agro Product Ltd. Chairman R.G. Chandramogan Holds Discussions with CM Vijay

மேலும் ஆந்திர நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க 'ரெட்டி கேங்' இப்போது முதலமைச்சரை அந்த மாநிலத்துக்கு அழைத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார். "தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "ஆந்திரரெட்டிகேங் " உங்களை ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?" எனக் கேட்டுள்ளார்.

அப்பாவு பதிவில் கூறப்பட்டுள்ளபடி, ஹட்சன் ஒரு ஆந்திராவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அல்ல. அது தமிழ்நாட்டு நிறுவனமே ஆகும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நிறுவனத்தின் பெயர் ஹேரிடேஜ் ஃபுட்ஸ் என்பதாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்