தமிழ்நாடு

“விஜய் அண்ணா… நீதி வேணும்” - தற்கொலை செய்துகொண்ட தவெக தொண்டர்! கடைசி கடிதத்தில் இருந்த உருக்கமான கோரிக்கை!

இது எனது அன்பான வேண்டுகோள் இதற்கு ஒரு நீதி வேண்டும்

Muthu Lakshmi

சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கூறி இளைஞர் முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டு தெருவைச் சேர்ந்த கூலி வேலை பார்த்து வரும் சுதா (வயது 48). இவருக்கு 25 வயதில் பிரபாகரன் என்ற மகனும் உள்ளார். இவருக்கு இன்னும்  திருமணம் ஆகாத நிலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11 ம் தேதி மாலை திடீரென்று வீட்டில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிற்கு காரணம் தெரியாத நிலையில் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அவரை பரிசோதித்த பிறகு, அவரது சட்டை பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை கைப்பற்றிய போலீசார், “அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து இளைஞர்களையும், சிறுவர்களையும் மதுப்பழக்கத்திற்கு ஆளாக செய்கின்றனர்” என்றும் “அதற்கு உடனடியாக அனைவரையும் கைது செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எழுதியுள்ளார். மேலும் “இது எனது அன்பான வேண்டுகோள் இதற்கு ஒரு நீதி வேண்டும் என்றும் திரு. அண்ணா விஜய் அவர்களுக்கு”  என்றவாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. 

உயிரிழந்த பிரபாகரனின் கடிதத்தை சேந்தமங்கலம் போலீசார் கைப்பற்றி பிரபாகரன் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்தனர் மேலும் தற்கொலை செய்து கொண்ட பிரபாகரன் மது புழக்கத்தை தடை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் பல்வேறு கோணங்களில் சேந்தமங்கலம்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.