vijay campaign  
தமிழ்நாடு

கரூரில் இன்று சம்பவம் செய்யக் காத்திருக்கும் விஜய்..! அடேங்கப்பா இத்தனை நிபந்தனைகளா!? -அச்சத்தின் உச்சத்தில் செந்தில் பாலாஜி!!

இன்று நடைபெற உள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் ...

Saleth stephi graph

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக மக்களையும் சந்தித்து வருகிறார் விஜய். 

ஆனால் அவர் கிடைக்கும்  இடங்களில் எல்லாம் பேசுவது வெறும் திமுக எதிர்ப்புதான், அவர் பாஜக, அதிமுக -ஆகிய கட்சிகளை விமர்சித்தாலும் திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி, ஊழலில் திளைத்த கட்சி என காத்திரமாக விமர்சித்திருந்தார்.

அதற்கு அடுத்து வந்த, மதுரை மாநாட்டில்stalin Uncle” கேக்குதா? என பேசி மு.க.ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த “அப்பா” இமேஜை உடைத்துவிட்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக விஜய் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -விற்கு எதிரான விமர்சனங்களையே முன்னெடுத்து வருகிறார். 

அதிலும் கடந்த நாகப்பட்டினம் - திருவாரூர் பரப்புரையின்போது அவர் பேசிய கருத்துக்கள் மேலும் வைரலாகின. விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில்தான் விஜய்  - இந்த வாரம் நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை நடத்த உள்ளார். நேற்றுதான் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாமக்கல் மாவட்ட காவல் ஆணையரிடம் அனுமதி பெற்று வந்தார், 

 நாமக்கல்லை  தொடர்ந்து கரூரிலும் பரப்புரை நடத்த அனுமதி கிடைத்துள்ளது .

இன்று நடைபெற உள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

1. நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்ட்ர மீடியன் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் கூடாது. மேலும் தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக்கூடாது இவற்றை முறையாக கூட்டம் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் கவனித்து கொள்ளவேண்டும்.

2. நிகழ்ச்சி நடைபெறும் போது தங்களது தொண்டர்கள் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

3. வாகனங்கள் நிறுத்தும இடங்களை முன் கூட்டியே அறிந்து நிகழ்ச்சிக்கு அழைத்து வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்று முறையாக வாகனங்களை நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்துவதற்க்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

4. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு மின்சாரவாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

5. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ஏதேனும் அவசர ஊர்தி வரும் பட்சத்தில் தொண்டர்கள் மேற்படி வாகனத்திற்க்கு வழி விட வேண்டும்.

6. நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு அருகில் வணிக வளாகங்கள் மற்றும் IT நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதி என்பதாலும் மேலும் அதிகப்படியான தொண்டர்கள் கலந்து கொள்வதால் முதல் உதவி சிகிச்சை செய்வதற்க்கு முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்

7. பொதுக்கூட்டம் நடத்துவதற்க்கு முறையாக தீயணைப்பு துறையினர் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும்

8. கூட்டத்திற்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்

9. பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதிக்கபடுகிறது. மேலும் திருக்காம்புலியூர் ரவுண்டானாவானது தேசிய நெடுஞ்சாலையில் பிற மாவட்டங்களின் முக்கிய இணைப்பு சாலை என்பதால் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ரோடு சோ நடத்த அனுமதி இல்லை.

10. பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

11. பொதுகூட்டத்திற்க்கு அனுமதி இல்லாமல் LED திரை மற்றும் மேடை அமைக்க கூடாது.

மேற்படி நிபந்தனைகள் மீறாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட்டத்தின் நிகழ்ச்சியை நடத்தவும் அனுமதித்த பின்னரும், மேலும் உரிய அனுமதி பெறாமல் பதாகைகள் வைப்பதும் அவசர சேவை வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தினாலோ தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை  தெரிவிக்கப்படுகிறது.

கரூரில் என்ன பேசுவார் விஜய்!?

கரூரில் நிச்சயம் விஜய் -ன் வாயில் சிக்கப்போவது செந்தில் பாலாஜி தான் என்கின்றனர் அரசியல் ஆர்வலர் சிலர். சில நாட்களுக்கு முன்பு நடந்த ‘முப்பெரும் விழாவை’ செந்தில் பாலாஜிதான் ஒருங்கிணைத்திருந்தார். மிகச்சிறப்பான ஏற்பாடு,ஸ செயல் வீரர் செந்தில் பாலாஜி என்றெல்லாம் முதல்வரால் புகழப்பட்டிருந்தார். 

இதை வைத்துதான் விஜய் பேச உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் செந்தில் பாலாஜி பயத்தில் உள்ளதாகவும் சிலர் கிசுகிசுகின்றனர்.ஆனால் ஏற்கனவே திமுக நிகழ்வுகள் அனைத்தும் சனிக்கிழமையை தவிர்த்து வேறு வேறு நாட்களில் நடக்கின்றன. திமுக -இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  2026 சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழகம் அல்லோலப்படும் என்பது உறுதி.. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.