tvk is againsed n.anand  
தமிழ்நாடு

இயல்பு நிலைக்கு திரும்பிய தவெக..! “ஆனாலும் விஜய் கடுப்பில் தான் உள்ளார்” - கைமாறும் பொதுச்செயலாளர் பதவி!?

தமிழக வெற்றி கழகத்தில் நிலவும் மற்றுமொரு பெரிய சிக்கல் அங்கே விஜய் தான் தலைவர் முகம். அவரோடு....

மாலை முரசு செய்தி குழு

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்து ஒவ்வொரு குடும்பத்தையும் கரூருக்கு நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கரூருக்கு செல்லமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்து வருகிறார். இதற்கு நேற்று காலை முதலே தவெக தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களை தங்களது சொந்த வாகனகளில் அழைத்து வந்து கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் அரங்கில் தங்க வைத்திருந்தனர். பின்னர் சொகுசு பேருந்துகள் மூலம் நேற்று இரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாமல்லபுரம் அழைத்துவரப்பட்டனர். அப்போது ஒவ்வொரு குடும்பங்களையும் தனிமையில் சந்தித்த விஜய் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. 

இயல்பு நிலைக்கு திரும்பியதா தவெக 

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு விஜய் மக்களை சந்தித்துள்ளார், மேலும் மாவட்ட அளவில் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.  ஓரளவிற்கு பட்ட அடியிலிருந்து மீண்டு பாஜக இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என சொல்லாம்.   ஆனால் கட்சிக்குள் புதுவிதமான சலலசப்பு எழுந்துள்ளதாக, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். “கரூர் சம்பவத்தில் தவெக நடந்து கொண்ட விதம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை. ஆனால் முதற்கட்ட தலைவர்கள் யாரும் பாதிக்கப்பட்ட மக்களோடும் இல்லை, கட்சி தொண்டர்களை வழிநடத்தவும் இல்லை. 

தமிழக வெற்றி கழகத்தில் நிலவும் மற்றுமொரு பெரிய சிக்கல் அங்கே விஜய் தான் தலைவர் முகம். அவரோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் இரண்டாம் கட்ட முன்றாம் கட்ட தலைவர்களாக அறியப்படுகின்றனர். அது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது மேலும் கட்சிக்கு பின்னடைவை தந்துள்ளது. மேலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நபராக ஆனந்த் உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் கூட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆனந்த் கட்சியைவிட்டு நீக்கப்படுவாரா? என்ற கேள்வியும்சில நாட்களுக்கு முன்னரே எழுந்துவிட்டது. இந்த சூழலில் கரூரில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு புஸ்ஸி ஆனந்த் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்தார். அதன்பின் கடந்த வாரம்தான் அவர் வெளியே வந்தார். ஆனால் அதற்கு பின்பும் கூட அவர் வீட்டிற்கு உள்ளேயே தான் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று பாதிக்கப்பட்ட கரூர் குடும்பங்களை விஜய் சந்தித்தார், ஆனால் அப்போதும் உடன் ஆனந்த் இல்லை. இதன் மூலம் விஜய் ஆனந்த் மீது வருத்தத்தில் உள்ளது தெரிகிறது.  அதற்கு காரணம் புஸ்ஸியின் தலைமறைவுதான் காரணம் என்கின்றனர். நேத்து நடந்த நிகழ்வில் கூட அவர் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் சமீபத்திய கூட்டங்களை எல்லாம் ஜான் ஆரோக்கியசாமிதான் நடத்துவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் கட்சி பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது. ஒருவேளை பொதுச்செயலாளர் பொறுப்பு ஆனந்திடம் இருந்து பறிக்கப்பட்டு ஆதவ் அர்ஜுனாவிடம் கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி  கரூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது அவர்தான் டெல்லி வரை சென்று கட்சி வேலைகளை செய்தார், வழக்கு வாங்கியும் அதை லாவகமாக கையாண்டார் இதனால் அவர் மீது நன்மதிப்பு கூடிவிட்டது எனவும் சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.