ராப்ஸ் பிரசாத்நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய நடவடிக்கைகள் அவர் அரசியலில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அகில இந்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ராப்ஸ் பிரசாத் என அழைக்கப்படும் பிராசாத் என்பவரை நியமித்துள்ளார்.
இந்த நியமன கடிதத்தில், "மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கினைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்பு பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல், உறுப்பினர் சேர்க்கையை மேம்படுத்துதல் மற்றும் மன்றத்தின் அனைத்து அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் ஒருங்கினைத்தல் ஆகிய பொறுப்புகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அமைப்பின் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் தலைமை நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, ஒற்றுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு, ரசிகர் மன்றத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மன்றத்தின் வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்." என எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றத்தை வலுவாக கட்டுமானம் செய்வது ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய நடிகர்கள் தனகாலது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றாமாக/இயக்கமாக மாற்றியதை ஒத்த செயல்பாடாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் விஜய் சேதுபதி, தலைமைப்பண்பு குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையாகின.
அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதியை கடுமையாக தாக்கி விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். சில நாட்கள் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன.
இறுதியில் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியும், அதன்பிறகு விஜய் சேதுபதியும் விளக்கம் அளித்ததால் பிரச்சனை ஓய்ந்தது. இந்த சர்ச்சைக்குப் பிறகு ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் முடிவை விஜய் சேதுபதி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராப்ஸ் பிரசாத், ஒரு நிகழ்ச்சி ஒருணக்கினைப்பாளராக இருந்தவர். குறிப்பாக ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சிகளை மேனேஜ் செய்துவந்தார்.
இப்போது சினிமாவில் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார். விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனத்துடன் இணந்து பணியாற்றிவருக்கிறார்.
இவர் மேனேஜ் செய்யும் முக்கிய பிரபலங்கள், விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யா சேதுபதியும் ஆவர். இன்னும் சில நடிகர்களுக்கு மேனேஜராக இருந்துள்ளார். சில திரைப்படங்களை ஒட்டி பிரபலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்