கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ள துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் காணொளி மூலம் தனது வலியையும் இரங்கல்களை தெரிவித்துள்ளார் அந்த காணொளியில் “என் வாழ்க்கையில் நான் இது போன்ற ஒரு வலிமிகுந்த ஒரு நிகழ்வை நான் பார்த்ததே இல்லை என் மனது முழுவதும் வலி நிறைந்து உள்ளது. அரசியலை காரணங்களை எல்லாம் தாண்டி இனி என் மனதில் மக்களின் பாதுகாப்பு தான் முதன்மையாக இருக்கும், எனவே மக்கள் பாதுகாப்பிற்காக சிறந்த இடங்களை இனி தேர்ந்தெடுப்போம். நானும் மனிதன் தான் அத்தனை உயிர்கள் இறந்த நிலையில் என்னால் மட்டும் எப்படி அங்கிருந்து வரமுடியும்? மீண்டும் நான் அந்த இடத்திற்கு சென்றால் தேவையற்ற பிரச்சனை வரும் எனவே அதை நான் தவிர்த்தேன்.
இந்த சூழ்நிலையில் எனக்காக பேசிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி, என்ன நடந்தது என தெரியாமல் தவித்து கொண்டிருந்த நிலையில் கரூர் மக்கள் நடத்தை சொல்லும் போது தெய்வமே வைத்து உண்மையை சொன்னது போல இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் வெளியில் வரும், கட்சியை சேர்ந்த தோழர்கள் மீது, சமூக வலைத்தளங்கள் பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். சிஎம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் தொண்டர்களை விட்டு விடுங்கள், நான் ஒன்னு என் வீட்டில் இருப்பேன் இல்லை அலுவலகத்தில் இருப்பேன்.
திருச்சி முதல் இதுவரை ஐந்து இடங்களில் பிரச்சாரம் நடத்தியுள்ளோம் அங்கு இது போன்ற அசம்பாவிதங்கள் அதுவும் ஏற்படவில்லையே. இங்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது எதனால் நடக்கிறது? மக்கள் இதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியும் உண்மை என்ன என்று. இனி மேலும் இந்த அரசியல் பயணம் இன்னும் வலிமையுடன் தொடரும்.” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.