vijay and vijay in porattam  
தமிழ்நாடு

“நீங்கள் சொல்வது ரீல்ஸ் தான்.. ரியல் கிடையாது” - ஈழத்தமிழர்கள் போராட்டம் முதல் ஜல்லிக்கட்டு வரை பதிலுரையில் பட்டியலிட்ட முதல்வர்!

2021 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றோம்...

Mahalakshmi Somasundaram

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் உரை மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று விரிவாக பதிலளித்தார். அதில் “ நாம் கொள்கை ரீதியாகவும் கட்சியில் அளவில் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். நான் ரெடியாக ஷூட்டிங் முடித்துவிட்டு நேரடியாக வந்து முதலமைச்சரானது போல பேசுறாங்க.. இதை அவங்க மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ‘நீங்கள் சொல்வது ரீல்ஸ் தான் ரியல் கிடையாது’ இந்த இடத்தில் எனது அரசியல் பயணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு சாதாரண நடிகனாக தான் என் பயணம் தொடங்கியது பின்னர் உழைத்து உயர்ந்து வந்தேன். இதற்கு கரணம் எனது உழைப்பு மட்டும் இல்லை மக்களின் அரவணைப்பு தான்.. ரசிகர் மன்றம் இருக்கும்புது மக்கோளோடு மக்களாக இருந்தும் 2008 ல் ஈழத்தமிழர் போராட்டம் நடத்தினோம். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கம் வழியாக மக்கள் நலன் பணிகளை மேம்படுத்திக் கொண்டே சென்றோம். கல்வி, விலையில்லா விருந்தகம், முட்டியை பால் ரொட்டி திட்டம், பயிலகம், நூலகம் வெள்ள நிவாரண பனிக்கால என மக்கோளோடு சேர்ந்து பயணித்து வருகின்றோம்.

நமது திரைப்படைகளில் முடிந்த அளவிற்கு அரசியல் பேசுனோம் ஊழல் மற்றும் லட்சத்திற்கான எதிர்ப்பை திரைப்படம் மூலம் எடுத்து சொன்னோம்.. அதற்காக அதிக பிரச்சனைகளை சந்தித்திருக்கிறோம் தற்போது வரை சந்தித்து வருகிறோம். இது மட்டும் இல்லாம 2011 மீனவர்கள் பிரசநாய்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர் பண்பாட்டு உரிமைக்கான ஆதரவு தெரிவித்தும். 2021 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றோம். கல்வி விருது விழா நடத்தி சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தோம்.

2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து நமது முதல் மாநில மாநாடு நடத்தி ஐந்து கொள்கை தலைவர்களை அறிவித்தோம். இந்தியாவிலேயே முதன் முறையாக இரண்டு பெண் ஆளுமைகளை கொள்கை தலைவர்களாக அறிவித்தோம். பெரியார் சொன்னது போல அவர் சொன்ன பெண் உரிமை, சமூக நீதி, பெண் கல்வி ஆகியவற்றை எடுத்துக் கொண்டோம். கடவுள் மறுப்பு கொள்கையை எடுத்துக் கொள்ளவில்லை யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என அறிவித்தோம். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கனும்னு மதசார்பற்ற சமூக நீதியை கொள்கையாக அறிவித்தோம்” இதையெல்லாம் அறிவித்துவிட்டு தான் அரசியலுக்கே வந்தோம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்