விஜய்க்கு ஆளுநர் கெடு  விஜய்க்கு ஆளுநர் கெடு
தமிழ்நாடு

"விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க கெடு!" நாளை முதல்வராகிறார் விஜய் - தொடர்கிறதா திக்..திக்.. நிமிடங்கள்?

நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார். தற்போது தவெக தலைவர் விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் ஆளுநர் கெடு விடுத்துள்ளார்.

Vinvizhi Leninton

தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் 13-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக 108 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் அவர் ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. 118 இடங்களில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று ஆளுநர் கூறிய நிலையில் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் நீடித்தது. அதன் பின்பு, திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளித்தது. மேலும், இவர்களைத்தொடர்ந்து விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் நிபந்தனை இன்றி வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறிய நிலையில் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 இடங்களை கடந்து 120 இடங்கள் பெறப்பட்டது. தற்போது தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த ஆளுனருடனான பேச்சு முடிவடைந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர் கெடு வைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்களுக்கும் தவெக தலைவர் விஜய் தனது பெரும்பன்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை அறிக்கைவிடுத்துள்ளது. மேலும்,நாளை தவெக தலைவர் விஜய்யுடன் 6 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்.

மேலும், இவர்களைத் தொடர்ந்து MLA-க்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மாளிகையில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் மக்கள் வெள்ளத்தில் ஆரவாரத்துடன் விஜய் புறப்பட்டு சென்றார். தவெக தொடர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார். தற்போது தவெக தலைவர் விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் ஆளுநர் கெடு விடுத்துள்ள நிலையில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பார் என்று நம்பப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.