வாசலில் வரவேற்ற விஜய், கேப்பச்சினோ அருந்திய ராகுல்.. இந்த சந்திப்பு ஏன் முக்கியம்? 
தமிழ்நாடு

வாசலில் வரவேற்ற விஜய், கேப்பச்சினோ அருந்திய ராகுல்.. இந்த சந்திப்பு ஏன் முக்கியம்?

இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் உரையாடியதாகக் கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.

இன்று சென்னை தீவுத் திடலில் தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாட உள்ளார். இதற்காக மதியம் சென்னை வந்தடைந்த அவர், முதல்வர் விஜய்யின் இல்லத்தில் அவரைச் சந்தித்துள்ளார்.

ராகுல், vijay

இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் உரையாடியதாகக் கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக இரண்டு தொகுதிகளையும் வென்றுள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் தனது பலத்தை அதிகரித்துள்ளது.

சட்டமன்றத்தில் தவெகவுக்கு அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பலத்தை அதிகரிப்பதற்கான பணிகளில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், விஜய் முக்கியப் பங்களிப்பாளராக உள்ளார். தமிழகத்தைக் கடந்து பிற மாநிலங்களிலும் செல்வாக்கு உள்ள தலைவராக அவர் பார்க்கப்படுகிறார்.

தற்போது நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறது.

அதுமட்டுமின்றி, சென்னையில் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் மட்டுமின்றி, பல்வேறு விஷயங்களில் தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுக்கு எதிராகப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தி – விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முன்னதாக, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் விஜய்யா அல்லது ராகுல் காந்தியா என்ற விவாதம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் பாலவாக்கம் பகுதியில் கிரிக்கெட் வீரர் தோனி நடத்தும் கஃபேக்குச் சென்று கேப்பச்சினோ அருந்தியுள்ளனர். அத்துடன், திராமிசு மற்றும் சாக்லேட் குக்கீஸையும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பால் தவெக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்ததாக, ராகுல் காந்தி இன்று மாலை மாணவர்களைச் சந்தித்து உரையாட உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்