VIJAY VS STALIN  
தமிழ்நாடு

அடுத்த சனிக்கிழமைக்கு விஜய் போட்ட மாஸ்டர் பிளான்..! தகவலைக்கேட்டு ஆடிப்போன முதல்வர்…!

மேலும் ஒரு புதிய மனுவையும் தவெக தேர்தல் வியூக வகுப்பாளர், ஆதவ் அர்ஜுனா உயர்நீதிமன்ற மதுரை கிளையில்....

மாலை முரசு செய்தி குழு

கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக அரசின் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும் நேற்று பசுமை சாலையில் நீதிபதி தண்டபாணியை சந்தித்த தவெக -வினர் இந்த வழக்கை விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்றும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். 

அந்த வழக்கும் இன்று 2.30 மணியளவில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

மேலும் ஒரு புதிய மனுவையும் தவெக தேர்தல் வியூக வகுப்பாளர், ஆதவ் அர்ஜுனா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போட்டுள்ளார். அந்த மனுவில் “பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் அளிக்க அனுமதி வழங்க வேண்டும். கரூரில் விஜய் பேசும்போது மின்சாரம் தடை பட்டுள்ளது.  குண்டர்களுடன் சேர்ந்து உள்ளூர் அரசியல்வாதிகள் சதியில் ஈடுபட்டுள்ளனர். சிபிஐ விசாரிக்க வேண்டும். விஜய் மக்களை சந்திப்பதை தடுக்கக்கூடாது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு தற்போது விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வந்து ஆலோசனை கூட்டம்  நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் அடுத்த 2 வாரங்களுக்கு பரப்புரையை நிறுத்திக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியதாக சொல்லப்படுகிறது, காரணம் என்னவென்றால், தற்போது வெளியில் வருவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம், மேலும் அது விஜய் -க்கே பாதுகாப்பு இல்லாத நிலையை உண்டாகும் என்பதால், இத்தகு யோசனையை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த அறிவுரையை விஜய் மறுத்திருப்பதாக தெரிகிறது, “நிச்சயம் மக்களை நாம் அடுத்த வாரமும் சந்திக்க வேண்டும். அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டும். ஒருவேளை நாம் பின்வாங்கிவிட்டால், தவெக -மீதுதான் தவறு இருப்பதாக மக்கள் நினைக்கக்கூடும், எதிர்க்கட்சிகளும் அதை விமர்சிப்பார்கள். என்ன அனாலும் நாம் மக்களை சந்திக்கத்தான் வேண்டும்.” என விஜய் சொல்லியதாக தெரிகிறது. 

ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. முதலில் அவர்கள் பாதிக்கப்பட்டோரை சந்திக்க அனுமதி கிடைக்க வேண்டும். ஒருவேளை இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றால், அதற்கு தமிழக அரசுதான் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் திமுக அரசு சதி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மக்களை சந்திக்க விரும்பும் விஜயை அரசு தடுத்தால் அது இன்னும் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அதனால் திமுக தலைமையும் டென்ஷனில் இருப்பதாக தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.