
கரூரில் நடந்த கோர சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 -பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன ? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பவ இனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் காவல் துறையினரிடம் இது குறித்து தகவல்களை கேட்டறிந்துள்ளார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் நேரில் ஆய்வு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.