tvk vijay 
தமிழ்நாடு

“CM சார்… வாய் கூசாம இப்படி சொல்றீங்களே!? மேடையில் விட்டு விளாசிய விஜய்..!

நான் சில தினங்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன்…

Saleth stephi graph

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது....

மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் உடன் ஒரு நிர்வாகி என 240 நபர்களும் மாநில நிர்வாகிகள்,சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 300 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்

சட்டமன்ற தேர்தல் கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்ப்பு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட உள்ளது

மேலும் செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் தொடர் மக்கள் சந்திப்புகள்,கட்சி மேம்பாட்டு பணிகள்,தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை 

இந்த ஆண்டுக்கான முதல் மாநில செயற்குழு இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் விஜய் தான் தவெக -வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

செயற்குழுவில் விஜய் பேசியவை 

  • தவெக -வில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய் -க்கே அதிகாரம் உள்ளது.

  • மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் பாஜக -வின் விஷமத்தனமான வேலைகள் ஒருபோதும் எடுபடாது. 

  • தனத்தை பெரியாரை அவமதித்தோ,  அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாகியோ தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் பாஜக ஒருபோதும் வெற்றி பெறாது.

  • சுயநலத்திற்காக பாஜக வுடன் இணைந்து கூடி குலாவி  கூட்டணி வைக்க நாங்கல் திமுக -வோ அதிமுக -வோ இல்லை.

  • நமது விவசாயிகள் பக்கம் என்ன ஆனாலும் நிற்போம் 

  • பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். 1600 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்கப்படும் சொன்னீங்க… மக்கள் பாதிக்கா வண்ணம் னா என்னங்க சார் .? ஏர்போர்ட் வருதுன்னு சொல்லணும்  இல்ல ஏர்போர்ட் வராது னு சொல்லணும், வெறும் 1600 குடும்பங்கள் அவ்வளவு சாதாரணமா போச்சா சி.எம் சார்?

  • 15,00 மக்கள், அவர்களும் நம்ம மக்கள் தானே.. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை, வீடுகளை, மக்களோட வாழ்வாதாரத்தை அழைச்சிட்டு அங்க ஏர்போர்ட் வருவது என்ன நியாயம், எப்படி வாய் கூசாமல் மக்களின் முதல்வருன்னு  சொல்லறீங்க.

  • விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அவர்களின் கண்ணீருக்கு காரணமாக அமைந்துள்ளதை.

  • நான் சில தினங்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன்… இப்போவும் ஒன்னும் நேரம் ஆக்கள் சிஎம் சார்.. சாதி மதம் இனம் கடந்து தங்கள் நிலம், வீடு வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை நேரில் கொஞ்சம் சந்தியுங்கள் சார். 

  • போராடும் பொதுமக்களை நானே நேரில் அழைத்துக்கொண்டு வந்து நேரில் முறையிடும் நிலைக்கு கொண்டு வந்து விடாதீர்கள் 

  • we are not against any development, that place is not fit for an airport. அந்த நீர்நிலைகளை அழித்து அந்த இடத்தில விமான நிலையம் கொண்டு வர முடியாது.

    உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.