தமிழ்நாடு

பட்டியல் சமூகத்தினரின் விநாயகருக்கு எதிர்ப்பு! 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.. சிதம்பரத்தில் பரபரப்பு!

மோதல் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தை

Muthu Lakshmi

பட்டியலின சமூகத்தினர் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், எங்கள் பகுதியாக கொண்டு வரக்கூடாது  என மற்றொரு  சமூகத்தினர் வழியை மறித்து போராட்டம். விநாயகர் சாமி அந்த வழியாக தான் செல்லும் என பட்டியலின மக்கள் புதுசத்திரம் பரங்கிப்பேட்டை சாலையில் மூன்று மணி நேரத்துக்கு மேலாக விநாயகர் சிலையுடன் மறியல் போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் இரு சமூகத்தினர் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்டியலின சமூகத்தினர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுமார் 6 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையுடன் ஊர்வலம் வந்தனர்.

பட்டியலின மக்கள் நடத்தும் விநாயகர் சிலை ஊர்வலம் எங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால் பட்டியலின மக்கள் நடத்தும் விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்டிப்பாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாமி ஊர்வலம் கண்டிப்பாக நடக்க வேண்டும் நாங்கள் அந்த வழியாக தான் செல்வோம் என விநாயகர் சிலை உடன் புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் பட்டியலின  சமூகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இரு சமூகத்தினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்