தமிழ்நாடு

தென்னிந்தியாவின் மிக நம்பகமான நிறுவனமாக ஜி-ஸ்கொயர் தேர்வு!

Malaimurasu Seithigal TV

ரியல் எஸ்டேட் துறையில் தென் இந்தியாவின் மிக நம்பகமான நிறுவனம் என்று ஜி-ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 

பிரபல மீடியா நிறுவனம் நாடுமுழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் பிரபல நடிகர்கள் சுனில் செட்டி, ஜிம்மி ஷேர்கில், சோனு சூட் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் தேர்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினர். 

இதில் ரியல் எஸ்டேட் துறையில், தென் இந்தியாவின் நம்பகமான நிறுவனமாக ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதை எஸ்செல் குழுமத்தின் COO லோயா அவர்கள் வழங்க ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் COO ஜுனைத் பாபு பெற்றுக்கொண்டார்.