கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு தற்போது மாநிலம் மற்றும் அரசியல் வட்டாரம் முழுதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பல கோடி மதிப்பிலான பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அரசியல்வாதிகள் மற்றும் காவல் அதிகாரிகளின் தலையீடு உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, “நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் போக்சோ-விற்கு துணை போவது கிடையாது, எங்கள் ஆட்சியில் போக்சோ நீதிமன்றங்களை திறந்து இருக்கிறோம். ஜெம் வீரமணி வழக்கில் அப்போது போதுமான ஆதாரம் இல்லை என நீதிமன்றத்திலேயே நாங்கள் கூறி இருக்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் விளக்கம் ஏற்புடையது அல்ல என்றும் திமுக அரசு குற்றவாளியை காப்பாற்ற முயல்கிறது என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “வீடியோவை இவர் பார்த்தாரா.. இல்லை பார்த்தவர்கள் இவரிடம் சொன்னார்களா? வீடியோ Shadow-ஆக இருந்துச்சு சரியான ஆதாரமில்லை என்றும் ஆதாரம் வந்த பிறகு விசாரணை தொடங்கும் என்று சொல்கிறாரே.. இவர் சட்டத்துறை அமைச்சராக இருந்த லட்சணம் இதிலே தெரிகிறது. 45 நாட்களுக்குள் விசாரணையில் திருப்பம் இல்லை என்றால்.. நீதிமன்றத்தை அணுகி மேலும் 2 மாதம் அவகாசம் கேட்டு இருக்க வேண்டுமா? என்றும் குறிப்பிட்டார். வீடியோ Shadow-ஆக இருக்குதுனு முன்னாள் அமைச்சர் ரகுபதி சொல்கிறாரே அதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். இவருக்கு எப்படி தெரியும் இவர் பார்த்தாரா.. இவரிடம் யார் சொன்னது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆதாரம் இருந்ததால் மட்டுமே இப்போ இந்த வழக்கு வெளியில் வந்துள்ளது... இல்லை என்றால் திமுக இந்த ஆதாரத்தை அழித்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணா யுனிவர்சிட்டி வழக்கிலையே முக்கிய குற்றவாளியான ஞானசேகரனை முதல் நாள் கைது செய்து பின் திமுக-வே தப்பிக்கவிட்டது. பின்னர் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகே மீண்டும் கைது செய்யப்பட்டார். அதே போல் இதுலேயும் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய “அவர் ஒரு முக்கிய தொழில் அதிபர், இதில் இருந்து தப்பிக்க யாரை அணுகி இருப்பார்.. முதல்வர் அலுவலகத்தையா? அமைச்சர்களையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 5 மாதங்களாக இந்த வழக்கு கிடப்பில் இருந்துள்ளது. அப்படி ஒரு குற்றவாளியை தப்பிக்கவிட்டது திமுக மாதிரியான ஒரு கேடுகெட்ட கட்சியாக தான் இருக்கும் என்றும் கட்டமான குற்றசாட்டுகளை முன்வைத்தார். வீடியோ நிழலாக உள்ளது என்பது ரகுபதிக்கு எப்படி தெரியும்? என்ற அவர் “வீரமணியை காப்பாற்றும் வேலையில் தான் திமுக தற்போது இறங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார். திமுக செய்த தவறை மறைக்கவே இப்போது ஓவர் ரியாக்ட் செய்கிறார்கள் என்றும் திமுகவினர் யாரை தப்பிக்க வைக்க பார்க்கிறார்கள் என்ற விவரம் தெரியவர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்ட பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் நிர்மல் குமார் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்