அடேங்கப்பா.. ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி வழக்கு.. உதவியாளர் மூலம் 70 கோடி "செட்டில்மென்ட்" - தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்!

அந்த பணம் நேரடியாக அவரின் உதவியாளரான கணேசனின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி
Published on
Updated on
1 min read

கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதுடைய வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு தற்போது மாநிலம் முழுவதும் மற்றுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பல கோடி மதிப்பிலான  பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீடு உள்ளதாகவும் விசராயிரணையில் தெரியவந்துள்ளது. 

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணியிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரம் கிடைத்ததை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2025ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த முடிவு அறிக்கையை நிராகரித்து, வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வீரமணியை கண்டறிந்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி பெயர் இடம்பெறாமல் இருக்க தனது உதவியாளர் கணேசன் மூலம் ரூ.70 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க கடந்த காலங்களில் காவல் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.70 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ECR-ல் உள்ள சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்றதாகவும், அந்த பணம் நேரடியாக அவரின் உதவியாளரான கணேசனின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உதவியாளரின் வங்கி கணக்கில் இருந்தே பல்வேறு அரசியல் பிரமுகர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு 70 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் இதில் பல அரசியல் மற்றும் காவல் அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com