தமிழ்நாடு

தாராபுரம்.. அமராவதி ஆற்றில் அலைமோதும் அரசியல்! கயல்விழி செல்வராஜை முந்துமா அதிமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கணிப்பு!

100 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. கணிப்பின்படி, திமுக 38% வாக்குகளையும்

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தாராபுரம் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாளங்கள்:

இங்கு 10.14% இளம் வாக்காளர்கள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 3.15% ஆக உள்ளனர், இது மற்ற தொகுதிகளை விடக் கணிசமாக அதிகம். சமூகக் கட்டமைப்பில் வெள்ளாள கவுண்டர்கள் 37%, தேவேந்திர குல வேளாளர்கள் 18%, முதலியார்கள் 10%, மற்றும் செட்டியார்கள் 8% என உள்ளனர். இது 60% கிராமப்புறங்களைக் கொண்ட தொகுதியாகும்.

உள்ளூர் பிரச்சனைகள்:

விவசாயிகள் எதிர்கொள்ளும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் ஏற்படும் மாசு ஆகியவை பிரதான பிரச்சனைகளாக உள்ளன. கல் குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் அவர்களின் செயல்பாடு சராசரிக்கும் கீழே இருப்பதாக மக்கள் கருதுவது அவருக்குப் பின்னடைவாக அமையலாம்.

தாராபுரம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் வரலாறு:

2021-ல் திமுக 46.82% வாக்குகளைப் பெற்றது, 2024-ல் அது 52.25% ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 46.11% பெற்றிருந்தது, 2024-ல் 37.18% ஆகக் குறைந்துள்ளது. நாம் தமிழர் 3.5%-லிருந்து 7.14% ஆகத் தனது வாக்குகளை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது.

2026 கணிப்பு:

2026-ல் திமுக 115 பூத்களில் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுக 105 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. 100 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. கணிப்பின்படி, திமுக 38% வாக்குகளையும், அதிமுக 37% வாக்குகளையும் பெறும். விஜய் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 20% வாக்குகளைப் பிரிக்கும். சுமார் 1% வித்தியாசத்தில் தாராபுரம் தொகுதி மிகக் கடுமையான இழுபறியில் உள்ளது. இது ஒரு 'ஈவன் ஸ்டீவன்' (Even Steven) தொகுதியாகத் தற்போது உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்