TVK government electricity purchase 
தமிழ்நாடு

"ஊழல் deal-ஐ முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பயணமா?"- பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம்.. உதயநிதி சொன்னது இதுதான்

காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

Vinvizhi Leninton

மின்சார கொள்முதல் விலையானது ரூ. 35 கொடுத்து தமிழக அரசு வாங்கவிருப்பதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தளபக்கத்தில் கட்டமாக சாடி பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசினை கடுமையாக விமர்சித்து பதிவிட்ட நிலையில், தற்போது, எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில், "கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர். இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?. ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். #Collectionகுமாரு" என்று மிக காட்டமாக சாடி பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.