TVK Supporter Mathivanan 
தமிழ்நாடு

"அரசை ஆள்வது விஜய்யா? அல்லது வேறு ஒரு 'பவர் சென்டரா'? நல்ல காதலி நல்ல மனைவியாக முடியாது" - தவெக ஆதரவாளர் மதிவாணன் முதன் முதலாக கடும் விமர்சனம்!

ஜான் ஆரோக்கியசாமிதான் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார், அதனால்தான் இப்படித் திடீர் U-turn வருகிறது என்று சொன்னால்..

Vinvizhi Leninton

தவெக அரசு நேற்றைய தினம் (செப் 27) தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் பிரிவு 24-ன் துணைப் பிரிவு (4)-ன் கீழ் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளிப்பது தொடர்பான, அரசாணையை வெளியிட்டு பின்னர் மீண்டும் அதனை வாபஸ் பெற்றது.

அதுகுறித்து தனியார் செய்தி தொலைக்கட்சி ஒன்றில் நடந்த விவாதம் ஒன்றில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதில் விருந்தினராக தவெக ஆதரவாளர் மதிவாணன் கலந்துகொண்டார். அவர் anஅந்த நேரலை விவாத நிகழ்ச்சியில் தவெக-வை விமர்சித்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் பிரிவு 24-ன் துணைப் பிரிவு (4)-ன் கீழ் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளிப்பது தொடர்பான, அரசாணையை தவெக அரசு வெளியிட்டது. பின்னர் பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றியதால் உடனடியாக அந்த அரசாணை தவெக அரசால் திரும்பபெறப்பட்டது. இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் தவெக ஆதரவாளர் மதிவாணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது நெறியாளர் இதுகுறித்த அவரது பார்வையை கேட்டார். அப்போது அவர், "இந்த விவாதத்தை இரண்டு விஷயங்களில் சுருக்கமாகச் சொல்ல விரும்புவதாக கூறி பேசத்தொடங்கினார். முதலாவதாக, 'Too many cooks spoil the soup' (அதிகமான சமையல்காரர்கள் சூப்பை கெடுத்துவிடுவார்கள்) என்ற ஆங்கிலப் பழமொழியை குறிப்பிட்டார்.

இரண்டாவதாக, எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு' என்ற திருக்குறளை குறிப்பிட்டு, மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறிய பொருளை குறிப்பிட்டார். அதாவது, "ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கிய பின் அதுபற்றி எண்ணிக்கொள்வோம் என்பது குற்றம்" என்று அதன் பொருளையும் குறிப்பிட்டார்.

விவாதத்தில் பேசிய அவர், "இந்த ஆட்சியை நடத்துவது அதிகாரிகளா, முதல்வர் விஜய்யா? அமைச்சர்களா? அல்லது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி 'சூப்பர்சீட்' செய்து நடத்துகிறாரா?" என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளதாக அவர் கூறினார். மேலும், "ஜான் ஆரோக்கியசாமிதான் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார், அதனால்தான் இப்படித் திடீர் U-turn வருகிறது என்று சொன்னால்.. அவர் நல்ல அரசியல் வியூக வகுப்பாளராக இருந்திருக்கலாம், தேர்தலுக்கு முன்.. 'நல்லகாதலியாக இருப்பவர்கள் நல்ல மனைவிகளாக இருப்பதில்லை திருமணத்திற்கு பின்' என்று குறிப்பிட்டார்.

பின்னர், "நிர்வாகத்தை நடத்துவது, அரசை நடத்துவதற்கு அவருக்கு அனுபவம் போதவில்லை. அவரது வழிகாட்டலில் நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன்" என்று கேள்விப்பட்ட செய்தியை அவர் குறிப்பிட்டார். மேலும் எதையும் நாம் 'பிளாக் அண்ட் வைட்'-டாக கூறமுடியாது, எல்லாம் கேள்விப்படுவதுதான் என்றார். மேலும், பரவலாக அதிகாரிகள் அல்லாமல் ஆலோசகர்கள்தான் நடத்துகிறார்கள் என்று கேள்விப்படுவதாக, அவர் அந்த நேரலை விவாதத்தில் கூறினார்.

மேலும் முதல்வர் விஜய் சில விஷயங்களை புரிந்துகொள்ளவில்லை என்று பேசிய அவர், "தான் ஒரு 'சிங்கிள் பார்ட்டி' அரசை நடத்தவில்லை என்று அவர் புரிந்துகொள்ளவில்லை. மேலும், பெரும்பாண்மை பெற்ற 'சிங்கிள் பார்ட்டி' நடத்தவில்லை என்றும், இதை அவர் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது அவருக்கு அவ்வாறு சொல்லிக்கொடுத்துள்ளார்களா?" என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

எந்த முடிவை எடுத்தாலும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் 'மக்கள் எதிர்ப்பு குரலுக்கு மதிப்பு' என்கிறார்கள் அப்போது ஏன் அந்த எதிர்ப்பு குரலை முதலிலேயே கேட்கவில்லை? என்ற கேள்வியினையும் கேட்டார்.

"ஒரு முடிவெடுப்பதற்கு முன்னாலேயே 'ஸ்டேட் ஹோல்டர்ஸ்' என்று குறிப்பிடுவார்கள், அவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு செய்தால் எதிர்ப்பு குரலே வராதே" என்றும் கூறினார். மேலும், "நீங்கள் தன்னிச்சையாக தடாலடியாக அறிவித்துவிடுகிறீர்கள். எதிர்ப்பு குரல் வந்தால் 'பேக்' அடித்து ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம் என்றால் இது ஒரு 'பேட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் பிராக்டிஸ்தான்'" என்று நேரலையில் கடுமையாக சாடினார்.

மேலும், "இது போன்ற விஷயங்கள் எப்படி நடக்கிறது? முதல்வர் விஜய் தினமும் பேப்பர் படிப்பர்.. நியூஸ் பார்ப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன். உதாரணமாக, புதிய தலைமை செயலகம் கட்டுவது, அதாவது 'ராங் ஆட்டிடியூட் அண்ட் ராங் அட்வைஸ்'. ஒரு 1200 கோடி ரூபாய் செலவழிக்கிற ஒரு திட்டத்தை சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது அதை சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் விவாதித்து முடிவெடுத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்.

அதற்கு பதிலாக யார்.. எப்படி அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றால் '110 விதியின் கீழ்' நீங்கள் அறிவித்துவிட்டீர்கள் என்றால் அதன் மீது 'டிஸ்கஷன்' கிடையாது; 'ஸ்பீக்கர்' அனுமதிக்கமாட்டார் என்றால் எங்கள் சட்டமன்றம்.. MLA-வாக செல்பவர்களுக்கு கூட கருத்து சுதந்திரம் கிடையாதா?" என்று சரமாரியான தனது கேள்விகளை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'டிரான்ஸ்பரென்சி அண்ட் கவேர்னெஸ்' இருக்கும் என்று விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைத்து கூட்டத்திலும் பேசினார். நல்லவேலையாக இப்போது அதனை வாபஸ் வாங்கிவிட்டார்கள்.

அதாவது, 'Right to information' இது எவ்வளவு பெரிய போராட்டத்தில் இருந்து வந்திருக்கிறது தெரியுமா? 2005-ல் திடீரென அது வானத்தில் இருந்து குதிக்கல, அருணா ராய் போன்ற IAS அதிகாரிகள் எல்லாம் எவ்வளவு பாடுபட்டார்கள், எவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 10 வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக இந்த 'தகவலறியும் உரிமை சட்டம்' நாடுமுழுவதும் வந்துள்ளது.

ஆனால், "இப்போது காலையில் ஒன்று சொல்கிறார்கள், மதியம் ஒன்று சொல்கிறார்கள்" என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி தனது கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு அதிசயமா இருக்கு.. நான் இப்படி கண்டதில்லை" என்று தனது கருத்தினை ஆணித்தரமாகவும், சரமாரி கேள்விகளுடனும் நேரலை விவாத நிகழ்ச்சியில் முன்வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்