தமிழ்நாடு

கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா.. கனிமொழியை களமிறக்க திமுக திட்டமா? பலம் குறைந்த தவெக.. ஆட்சிக்கு வந்தும் சவால்!

நட்சத்திர தொகுதியான கொளத்தூரில், இடைத்தேர்தல் வேட்பளராக பலம் மற்றும் பரிச்சயமான வேட்பளரையே தவெக களமிறக்கும்...

Muthu Lakshmi

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் பெருமபான்மையை கைப்பற்றி, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த மேஜிக் நம்பர் எப்போவுமே தவெக-விற்கு பெரிய சிக்கலாகவே  உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்கத் தேவையான மேஜிக் நம்பர் 118 ஆகும். தவெக 233 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததை அடுத்து தவெக MLA-க்கள் 107 ஆக குறைந்து.

ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியதை அடுத்து கூட்டணி அமைக்க முடிவு செய்து, காங்கிரஸ் (5), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மற்றும் இடதுசாரி கட்சிகளின் (CPI, CPI-M) ஆதரவுடன் தவெக கூட்டணி 118 என்ற மேஜிக் நம்பரை தாண்டி ஆட்சியமைத்தது.
இங்கு தான் ஒரு ட்விஸ்ட் நடந்தது, அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 MLAக்கள் தங்களுது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்று தனது பலத்தை 109 ஆக கூட்டியது.

இந்நிலையில், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் எம்.எல்.ஏ-க்கள் இன்றி காலியாக உள்ளன. முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட, கொளத்தூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைந்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு செப்டம்பர் 8, 2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான சட்ட தடையும் தற்போது நீங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் 6 தொகுதிகள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதே சமயம், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதமாகி வருகிறது.

தற்போது கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் அங்கு போட்டியிடுவாரா? என்பதே இப்போது உள்ள முக்கிய கேள்வியாக உள்ளது. இரெண்டு முறை வெற்றி பெற்ற ஒருவர் அந்த தொகுதியில் தோற்கடிக்கப்பட்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி ஏற்கனவே கணிக்கப்பட்டது என்று சில பேச்சுகளும் உள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் தவெக வி.எஸ். பாபு. இவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து பின் தவெக கட்சியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வென்றார்.

நடந்துமுடிந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்களில், ஆதிக்கம் பெற்ற அதிமுகவும், திமுகவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசாரங்கள் செய்திருந்தனர். என்ன பயன்? தாராபுரத்தில் தவெக எம்எல்ஏ சத்யபாமாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும்கூட, இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களே வெற்றிபெற்றி மீண்டும் ஆண்ட கட்சிகளின் கள ஆதரவு கேள்வி குறியானது.
நட்சத்திர தொகுதியான கொளத்தூரில், இடைத்தேர்தல் வேட்பளராக பலம் மற்றும் பரிச்சயமான வேட்பளரையே தவெக களமிறக்கும். அதற்கு ஈடுகொடுக்க மற்ற கட்சிகளும் இதை பலோவ் செய்யவேண்டியுள்ளது, அப்படி இருந்தால் மீண்டும் ஸ்டாலின் களமிறக்குவாரா என்று கேள்வி உள்ளது.

ஒரு வேலை மீண்டும் திமுக தோற்றல் அது முக ஸ்டாலின்-க்கு எதிராக கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும். மேலும் தற்போது திமுக நாடாளுமனற்ற உறுப்பினர் கனிமொழிக்கு காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளத்தக்க தெரிகிறது. இந்த பிம்பத்தை பயன்படுத்துமா திமுக ன்ற கேள்வியும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் காத்து யார் பக்கம் வீசுதுன்னு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.