தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டினால் மக்கள் முந்தி அடித்திக்கொண்டு நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து தங்கள் வாகனங்களுக்கு முழு டேங்க்கில் பெட்ரோல்களை நிரப்பிவிட்டு செல்கின்றன. ஆனால் வாகனங்களில் அவ்வாறு முழு டேங்க் வரி முழுவதும் நிரப்பலாமா? அவ்வாறு செய்வது வாகனத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
தற்போது கோடைகாலம் நெருங்கிக்கொண்டிருந்தது அதே நேரத்தில், ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் பிரச்சனையின் காரணமாக உலகெங்கிலும் கச்சா எண்ணெயின் தேவை அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் மக்கள் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக காலை முதலே காத்திருந்து வாகனகளுக்கு எரிபொருளை நிரப்பி செல்கின்றனர்.
பொதுவாகவே சிலர் தங்கள் வாகனங்களுக்கு ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பத்தான் விரும்புவர். ஆனால் அவ்வாறு நிரப்புவது வாகனத்திற்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். அதாவது, ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பிவிட்டு வண்டியை எடுக்கும் போது சிக்கல் ஏற்படாவிட்டாலும், ஒருவேளை வண்டி விபத்திற்கு உள்ளாகும் போது வண்டி வெடிக்க வாய்ப்பிருக்கிறது. பிரிம் (Brim) என்று சொல்லக்கூடிய விளிம்பு வரை வாகனங்களில் எரிபொருள் நிரப்பும்போது, டேங்க்கிற்குள் ஆவியாகும் தன்மையும் அதிகமாக நடக்கும். காற்றுக்கு இடமில்லாமல் அழுத்தம் அதிகரித்து, முக்கியமாக அதிக வெப்பநிலையில் இருக்கும்போது இது போன்ற வாகன வெடிப்புகள் நிச்சயம் நடக்கும். மேலும், முழு டேங்க்கையும் நிரப்பும்போது வண்டியின் மைலேஜ் அதிகமாகும் என சிலர் நினைக்கலாம், ஆனால் நிச்சயம் மைலேஜ் குறையதான் வாய்ப்பிருக்கிறது.
பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருட்கள், வெளிப்புற வெப்பநிலையுடன் தொடர்பு கொள்ளும்போது, அது விரிவடைகிறது. இதன் காரணமாக வெப்பமான காலநிலையின் போது பெட்ரோல் டேங்க்கின் உள்ளே எரிபொருள் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் அந்த எரிபொருள் பல இடங்களில் பரவவும் தொடங்குகிறது. இந்த நிலையில், வாகனங்களில் பெட்ரோல் அல்லது டீசலை, டேங்க் மூடி வரை நிரப்பினால், அது விரிவடைய இடமில்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. மேலும், எரிபொருள் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இதனால் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், விபத்துக்கள் ஏற்படவும், தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஒவ்வொரு நவீன வாகனத்திலும் எரிபொருள் ஆவி வளிமண்டலத்தில் வெளியேறுவதைத் தடுக்க ஒரு ஆவியாதல் உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்பு (EVAP) வைக்கப்பட்டுள்ளது. டேங்க் நிரம்பி வழிந்தால், எரிபொருள் அமைப்பின் கேனிஸ்டருக்குள் நுழையக்கூடும், இது அமைப்பை சேதப்படுத்தும் மற்றும் பழுதுபார்க்க அதிக பணமும் செலவாகும். மேலும் முழுவதுமாக பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பும்போது வாகனத்தின் பாகங்கள் சேதத்திற்கு உட்படலாம்.
மேலும், முழு டேங்க்கை நிரப்புவதால் வாகனத்தின் எடையும் அதிகமாகும். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமும் (The Ministry of Consumer Affairs, Food and Public Distribution) எரிபொருள் டேங்கை முழுவதுமாக நிரப்புவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. இந்த நடைமுறை ஆபத்தானது என்பதால், இதுகுறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உஷாராக இருங்கள்: மேலும், பெட்ரோல் போடும் போது சில விஷயங்களில் கவனமுடன் இருப்பதும் நல்லது. பெட்ரோல் போடும்போது, ஜீரோ பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மீட்டரின் வேகத்தை சரிபார்ப்பதும் மிகவும் முக்கியம். அதாவது, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்போது மீட்டர் மெதுவாகவே நகரும் ஆனால் 1000 ரூபாய்க்கு போடும்போது அது அதிவேகமாக சென்று விடுகிறது. இதனை 'கன் பாயிண்ட் லெவல்' என்று கூறுவார். அதாவது 100 ரூபாயில் போடும்போது கன் பாயிண்ட் லெவல் ஒன்றில் இருக்கும். ஆனால் 1000 ரூபாய்க்கு போடும்போது கன் பாயிண்ட் லெவல் மூன்றில் இருக்கும். இதனால் அதன் அளவை சரிபார்க்க முடியாத நிலை ஏற்படலாம். அதனால் பங்க் ஊழியர்களிடம் கன் பாயிண்ட் லெவல் 1ல் வைத்தே பெட்ரோல் அல்லது டீசல் போடச்சொல்வது நல்லது.
சிலர் பைக்கில் பெட்ரோல் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க செல்போனில் டார்ச்சை அடித்து டேங்க்குக்குள் பார்ப்பதும் உண்டு. இது போன்று செய்வது மிகவும் ஆபத்தான ஒன்று. அதாவது, அந்நேரம் உங்கள் போனிற்கு அழைப்பு வந்தால் கதிர்வீச்சு அதிகமாகி வாகனம் வெடிக்க வாய்ப்பிருக்கிறது.
அதனால் மக்களே கவனமாக இருந்து, உங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்புங்கள். 50% எரிபொருள் உங்கள் வாகனத்தை நெடுநாள் காக்க போதுமான ஒன்று.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.