தமிழ்நாடு

தோத்தாலும் ஜெயிச்சாலும்.. தோல்வியால் துவாளாதா கம்யூனிஸ்டுகள்.. என்ன சொல்கின்றனர்?

எங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்போதும் மக்களை நாங்கள் குற்றப்படுத்தியதில்லை

Muthu Lakshmi

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இரு தொகுதியிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் திமுக மற்றும் மூட்டுவது இடத்தில் அதிமுகவும் இடம்பெற்றுள்ளது.

தவெக-விற்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடது சாரிகள், இந்த இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கினார்கள். இரு தொகுதியிலும் CPI (M) மற்றும் CPI காட்சிகள் தங்களது வேட்பளர்களை அறிவித்து தேர்தலை எதிர்கொண்டனர். தாராபுரத்தில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் CPI வேட்பளார் லட்சுமணன் 1,157 வாக்குகள் பெற்றிருந்தார். மதுராந்தகத்தில் தனித்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெறும் 1,506 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மக்களுக்கு நன்றி தெரிவித்த சபி கட்சியின் மணிலா தலைவர், “எங்களுக்கு மரணமும் கிடையாது; தோல்வியும் கிடையாது!” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டன. இடதுசாரிகள் ஒரு அரசியலுக்காக இயக்கம் நடத்தி வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். சாதி, மதம், பணம் ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தல் நடைபெறக்கூடாது. இடதுசாரிகளை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தேட வேண்டாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார் 

அதையடுத்து மதுராந்த கம்யூனிஸ்ட் வேட்பளார் சுகந்தி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் தோற்றுவிடவில்லை! எவராலும் எங்களை தோற்கடிக்கவும் முடியாது!

இழப்பதற்கு ஏதுமற்றவர்களுக்காக போராடுகிற நாங்கள் இழப்பதற்கும் ஏதும் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். எங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்போதும் மக்களை நாங்கள் குற்றப்படுத்தியதில்லை. இப்போதும் குற்றப்படுத்தப் போவதில்லை! எப்போதும் போராடுகிற எங்களுக்கு தேர்தலும் ஒரு போராட்டமே. கம்பீரமாக போராடினோம்! நூற்றுக்கணக்கான தோழர்கள் மாசற்ற உழைப்பை நல்கினார்கள். தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்றோம். வீதிகள் அனைத்திலும் அரசியல் உரையாடல் நடத்தினோம் எங்கும் வெறுப்பு இல்லை. 

அன்பை மட்டுமே வெளிப்படுத்தினார்கள். ஆதங்கமாய் பேசினார்கள். அதுதான் எங்களது நம்பிக்கையாக இப்போதும் முன் செல்கிறது.

எப்போதும் எங்களுக்கு ஓய்வில்லை! இப்போது இடதுசாரி கட்சிகள் இணைந்து வருகிறோம்! முன்னிலும் பலம் கொண்டு பணியாற்றுவோம்! 

அறம் சார்ந்து அரசியலின் அடையாளம் நாங்கள்! உழைக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை நாங்கள்!மதுராந்தகம் மக்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி. இன்குலாப் ஜிந்தாபாத்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்