saniation workers protest  
தமிழ்நாடு

“போராட்டத்தை கைவிடப்போவதில்லை” -கலைஞர் நினைவிடத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!!

தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரை இருக்கக்கூடிய காமராஜர் சாலையில் ...

மாலை முரசு செய்தி குழு

பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில்  தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். சென்னை மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், துப்புரவுப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில் இன்று மதியம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில்  நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றிக் கைது செய்தனர்.தூய்மை பணியாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபெண் தூய்மை பணியாளர் மயக்கம் அடைந்தார்.மயக்கம் அடைந்த தூய்மை பணியாளர் பெண்ணை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கலைஞர் நினைவிடத்தில் அவருடைய சமாதி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய சுற்றி இரும்பு கம்பிகள் போடப்பட்டிருக்கிறது அந்த இரும்பு கம்பியை பிடித்து உள்ள செல்வதற்காக தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரை இருக்கக்கூடிய காமராஜர் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் பின்னர் அவர்கள் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.