உலகம்

என்னமா நீங்க இப்படி பண்றிங்களேமா? செல்லப்பிராணியை பள்ளியில் சேர்த்து 1 லட்சத்திற்கும் அதிகமாக செலவழிக்கும் பெண்! சீனாவில் நடந்த வினோதம்..

நாய்களுக்கான மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக,மாதம் 1,59,760 ரூபாய் செலவுசெய்து வருகிறார்

மாலை முரசு செய்தி குழு

சீனாவில் ஒரு பெண், தனது வளர்ப்பு நாயை நாய்களுக்கான மழலையர் பள்ளியில் சேர்த்து மாதம் 1,59,760 ரூபாய் செலவுசெய்கிறார் என்பது மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஒரு இளம்பெண், ஷாங்காயில் வசித்து வருகிறார். மேலும், தனது, பரபரப்பான வேலைசூழல் காரணமாக தன் வளர்ப்பு நாயுடன் நேரடம் செலவிட முடியவில்லை என்று கூறி, தனது, ஆறு மாத வயதுடைய தனது 'சாமோய்ட்' நாயை நாய்களுக்கான மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக,மாதம் 1,59,760 ரூபாய் செலவுசெய்து வருகிறார். போதுமான அளவு தனது நாயுடன் இருக்க நேரம் இல்லாததால், தனது ஆறு மாத சாமோய்ட் நாயைப் பயிற்சிக்காக ஒரு “நாய் மழலையர் பள்ளியில்” சேர்த்ததாக அவர் கூறினார். மேலும், அவரது கூற்றின் படி, அவரது வளர்ப்பு நாய்கான மாதாந்திரக் கட்டணத்தில் தினசரி "தங்குமிடக் கட்டணமாக" 188 யுவான், “பெற்றோர்-குழந்தை” கலந்துரையாடல் வகுப்புகளுக்கு 368 யுவான் மற்றும் “பள்ளிப் பேருந்து” ஆகியவை அவரது கட்டணத்தில் அடங்கும். அதே சமயம் செல்லப்பிராணிகளுக்கான உணவு தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், இந்த மையம், செல்லப்பிராணிகளுக்கான ஆளுமைச் சோதனை, நடத்தைப் பயிற்சி, தினசரி சுத்தம் செய்தல், உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் சமூகமயமாக்கல் ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கிறது. மேலும், இந்த பள்ளிகளில் சேர்க்கப்படும் தங்கள் செல்லப்பிராணிகளை உரிமையாளர்கள் இணையம் வழியாக நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் முடியும். இந்த செல்லப்பிராணிகளுக்கான பள்ளிகளின் உரிமையாளர், செல்லப்பிராணி உரிமையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, நாய்களில் காணப்படும் அதிகப்படியான குரைத்தல், மக்கள் மீது குதித்தல் மற்றும் முறையற்ற முறையில் சிறுநீர் கழித்தல் போன்ற நடத்தை சார்ந்த சிக்கல்களைச் சரிசெய்யவும் உதவுவதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும் இணையவாசிகள் பலரும், வளர்ப்பு நாய்க்காக இவ்வளவு செலவு செய்யவேண்டுமா? என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.