‘இஸ்லாமிய நேட்டோ’வில் பங்களாதேஷ்? இந்தியாவுக்கு ஆபத்தா? 
உலகம்

‘இஸ்லாமிய நேட்டோ’வில் பங்களாதேஷ்? இந்தியாவுக்கு ஆபத்தா?

சமீப காலங்களில் இந்தியாவுடன் சுமூகமான உறவில் இல்லாத வங்காளதேசம் இதில் இணைவதற்கு பொருத்தமான உறுப்பினராக பார்க்கப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து மெக்கா ஒப்பந்தம் (Mecca Pact) என்ற முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தக் கூட்டமைப்பை சர்வதேச அரசியல் வல்லுநர்கள் ‘முஸ்லிம் நேட்டோ’ என அழைக்கக் காரணங்கள் உள்ளன. நேட்டோ அமைப்பின் 5-வது விதியைப் போலவே, "உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டுப் பதிலடி கொடுக்கப்படும்" என்பதே இதன் முக்கியச் சாராம்சம்.

இந்தக் கூட்டமைப்பை விரிவுபடுத்தும் விதமாக, இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘முஸ்லீம் நேட்டோ'

இதற்காக எகிப்து, ஈரான் மற்றும் வங்காளதேசம் நாடுகளுடன் பேசுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அணு ஆயுதம் உள்ள ஒரே இஸ்லாமிய நாடாக இருக்கும் பாகிஸ்தான் இந்த அமைப்பின் மையப்புள்ளியாக இருக்கிறது. இது இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எகிப்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடயமல் இருக்க இந்தியா உடனான அதன் நட்புறவே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கு இதில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்லாமிய நாடுகளை கோபப்படுத்தியிருக்கிறது. அதனால் ஈரானின் இணைப்பும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சமீப காலங்களில் இந்தியாவுடன் சுமூகமான உறவில் இல்லாத வங்காளதேசம் இதில் இணைவதற்கு பொருத்தமான உறுப்பினராக பார்க்கப்படுகிறது.

முஸ்லீம் நேட்டோவில் உறுப்பினாராகுமா வங்காள தேசம்?

ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) அரசு, ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ என்ற வெளியுறவுக் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வருகிறது.

Bangladesh PM Tarique Rahman

பங்களாதேஷ் வெளியுறவுத் துறை இணையமைச்சர்கள் ஹுமாயூன் கபீர் மற்றும் ஷாமா ஒபாயித் இஸ்லாம் ஆகிய இருவருமே, "நாட்டின் இறையாண்மைக்கும் மக்களின் நலனுக்கும் உகந்ததாக இருந்தால் 'மெக்கா ஒப்பந்தத்தில்' இணைவது குறித்து நேர்மறையாகப் பரிசீலிப்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.

சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் விரைவில் ரியாத் செல்லவுள்ள நிலையில் இந்த கருத்து கவனம் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் வான்வழி, கடல்வழிப் போக்குவரத்து, ராணுவக் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு எனத் தொடர்புகளைப் பங்களாதேஷ் புதுப்பித்து வருகிறது.

பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமானின் இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடும், அந்த நாட்டு ராணுவத்தில் நபிகள் நாயகத்தின் தோழர்கள் (கலீபாக்கள்) பெயரில் புதிய ராணுவப் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருப்பதும் பங்களாதேஷ் 'இஸ்லாமிய நேட்டோ'வை நோக்கி வேகமாக நகர்வதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு:

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவது சாதரணமானதுதான். முஸ்லீம் நேட்டோ உருவாக்கப்பட்டு பாகிஸ்தான் பலம் பெற்றாலும் அதில் இடம்பெற்றுள்ள மற்ற இரண்டு நாடுகளும் இந்தியாவின் நட்பு நாடுகளாக இருப்பதனால் இந்த அமைப்பால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

The Makkah Joint Defense Agreement

ஆனால் இந்தியாவின் நட்பு நாடாக இல்லாத, பாகிஸ்தான் சார்பு நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெறுவது குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டும். 3 நாடுகள் இருக்கும் அமைப்பு செய்யலாற்றதாக இருக்கலாம். ஆனால் அதிக நாடுகள் இணையும் பட்சத்தில் அதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் இதுவரை இந்தியா பாதுகாப்பு துறையில் அதன் மேற்கு எல்லையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தது. தற்போது கிழக்கில் சீனாவுடன் வங்காளதேசம் பற்றியும் கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

"மேற்கு ஆசியாவில் நடைபெறும் இந்த மாற்றங்களை இந்தியா மிக நுணுக்கமாகக் கண்காணித்து வருகிறது" என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவே கவலையுடன் தெரிவித்துள்ளது.

வங்காளதேசம் எதிர்கொள்ளும் அபாயங்கள் என்ன?

வங்காளதேசம் நாடு ஒப்பீட்டளவில் பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்று. எனவே தனக்கான ஆதாயம் இல்லாமல் இந்த கூட்டமைப்பில் அது இணையாது.

இந்த அமைப்பில் இணைய சில நிற்பந்தங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

உதாரணமாக சௌதி அரேபியா, பங்களாதேஷ் தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கவும், உள்கட்டமைப்பு முதலீடுகள் செய்யவும் மற்றும் குறைந்த விலையில் நீண்டகால எரிபொருள் பாதுகாப்பு (எண்ணெய் supplies) வழங்கவும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது போல துருக்கியிடம் இருந்து, நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவப் பயிற்சிகளும் பாகிஸ்தானிடம் இருந்து ·         சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்புகளில் முழுமையான அரசியல் ஆதரவும் கோரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த கோரிக்கைகளை வைக்க காரணம் இதற்கு இணையான அபாயங்களையும் வங்காளதேசம் எதிர்கொள்ள உள்ளது.

வங்காள தேசத்துக்கு இருக்கும் அபாயங்கள் என்ன?

"இந்த ஒப்பந்தம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், இதில் இணைந்தால் பங்களாதேஷுக்கு சம்பந்தமே இல்லாத சவூதி - ஈரான் மோதலிலோ அல்லது இந்தியா - பாகிஸ்தான் போரிலோ பங்களாதேஷ் தேவையின்றி இழுத்து விடப்படும் ஆபத்து உள்ளது.

எனவே, நாட்டின் சுயாதீன வெளியுறவுக் கொள்கையை அடகு வைத்துவிட்டு எந்தப் போரிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது." என முன்னாள் தூதர் எம். ஷாஹிதுல் இஸ்லாம் மற்றும் ராணுவ ஓய்வு பெற்ற அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் நீண்ட காலம் பகை நாடுகளாக இருப்பது இந்தியாவும் பாகிஸ்தானும். வங்காளதேசம் இந்த ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமானால் அது பிராந்திய அமைதிக்கு நிச்சயம் குந்தகம் விளைவிக்கும்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்